Homeஉள்நாட்டு செய்திடீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்களுக்கு அரசாங்கம் நிவாரணம்

டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்களுக்கு அரசாங்கம் நிவாரணம்

spot_img

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை இலங்கை மக்களுக்கு குறைக்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்டோ டீசல் மற்றும் தொழில்துறை டீசலுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கு 15 பில்லியன் ரூபாயும், நவம்பர் மாதத்திற்கு 13.5 பில்லியன் ரூபாயும், டிசம்பர் மாதத்திற்கு 12.15 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்படவுள்ளன.

இதன்படி, மூன்று மாதங்களுக்கான டீசல் நிவாரணத்திற்காக ஒதுக்கப்படும் மொத்த தொகை 40.65 பில்லியன் ரூபாய் ஆகும்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தாமல், நுகர்வோரால் தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் விலையைப் பேணுவதே இந்த நிவாரணத்தின் நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும்,...

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை பார்த்து அஞ்சுகிறது – மஹிந்த

தற்போதைய அரசாங்கம், நாட்டில் உள்ள வேறு எந்த அரசியல்வாதியையும் விட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற...

6ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 6ஆம் வகுப்பிற்கான...

1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் ஒக்டோபர் 8ஆம் திகதி

ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...

More like this