நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
நேற்று (29) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் வெப்பநிலை உணர்வுக் குறியீடு (Heat Index), அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




