2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 61.6% அதிகரிப்பாகும்.
இதேவேளை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5% அதிகரிப்பாகும்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிய எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 58.7% அதிகரிப்பு என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




