Homeஉள்நாட்டு செய்திவாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திர விநியோக தாமதம் குறித்து விசாரணை

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திர விநியோக தாமதம் குறித்து விசாரணை

spot_img

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள் தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, தாமதம் ஆரம்பமான விதம், அதற்குப் பாதிப்பை ஏற்படுத்திய நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள், அத்துடன் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்வனவு நடைமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலக்கத் தகடுகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, தாமதத்திற்கான காரணங்கள், அது ஆரம்பமான காலப்பகுதி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்வனவு நடைமுறைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியுள்ளது.

இதன்போது, 2026 மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 6 இலட்சத்து 78,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், நாளொன்றுக்கு சுமார் 4,600 அனுமதிப்பத்திரங்களை மட்டுமே அச்சிடும் திறன் இருப்பதால் நிலுவை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமையை விரைவாகத் தீர்ப்பதற்காக ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை நிறுவி, நாளாந்த அச்சிடும் திறனை 8,200 அனுமதிப்பத்திரங்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாத வகையில் முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குதல், திணைக்களத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் தொடர்பிலும் குழு அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளது.

spot_img

Latest articles

2026ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக...

லால் காந்தவின் அந்த ஏழு நாள் அனுபவம்!

கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை,...

உலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,150 டன் உலர் மிளகாயை விடுவிக்க சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும்...

‘லொக்கு பெட்டி’யின் தம்பி கொலை!

அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டி’யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக...

More like this

2026ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக...

லால் காந்தவின் அந்த ஏழு நாள் அனுபவம்!

கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை,...

உலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,150 டன் உலர் மிளகாயை விடுவிக்க சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும்...