Homeஉள்நாட்டு செய்திஎந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயார்

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயார்

spot_img

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலே தமது தரப்புக்கு அடுத்த தேர்தலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வந்தாலும், அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முறையாக நிறைவு செய்ய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட வரையறைகளுக்கு அப்பால் சென்று தேர்தலை நடத்த முடியாது என்பதால், தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்து, முடிந்தளவு விரைவாக தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மத்தியில் அதிக ஆதரவை காணக்கூடியதாக இருப்பதாகவும் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அந்த மக்கள் ஆதரவை தேர்தலொன்றின் மூலம் மக்கள் ஆணையாக வெளிப்படுத்துவதற்கு தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

ஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'சிரிலிய...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

ஈஸ்டர் தாக்குதல் மேலும் இருவருக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு...

ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி...

More like this