Homeஉள்நாட்டு செய்திகுறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!

குறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!

spot_img

சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சாரதிகளுக்கான குறைபுள்ளி வழங்கும் முறையின் கீழ், 30 குறைபுள்ளிகளையும் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர விசேட விளக்கமளித்துள்ளார்.

சாரதி ஒருவரின் குறைபுள்ளிகள் 30ஐ அண்மிக்கும்போது, குறுஞ்செய்தி மூலம் அது குறித்து அறிவிக்கப்படும். 30 புள்ளிகளைக் கடந்தவுடன், சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதன் பின்னர் ஏழு நாட்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுவாக சாரதி அனுமதிப்பத்திரம் ஓராண்டு காலத்திற்கு இடைநிறுத்தப்படும். எனினும், மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிப் பாடநெறியில் பங்கேற்கும் சாரதிகளுக்கு, இந்தத் தடைக்காலத்தை மூன்று மாதங்களாகக் குறைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட ஏழு நாட்களுக்குள் அனுமதிப்பத்திரத்தை ஒப்படைக்கத் தவறினால், அதனை ஒப்படைக்கும் நாளிலிருந்தே தடைக்காலம் கணக்கிடப்படும். இதனால் அனுமதிப்பத்திர இடைநிறுத்தக் காலம் மேலும் நீடிக்கும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் 47க்கு இந்தக் குறைபுள்ளி முறைமை பொருந்தும். கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் போன்ற பாரதூரமான விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக ஏழு குறைபுள்ளிகள் வழங்கப்படும்.

சாரதி ஒருவர் ஒரே நேரத்தில் பல விதிமீறல்களில் ஈடுபட்டாலும், அதிகபட்ச தண்டனைக்குரிய விதிமீறலுக்கான குறைபுள்ளிகள் மட்டுமே கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

மேலும், இந்தக் குறைபுள்ளி முறைமையில் விதிமீறல்களைப் பதிவு செய்வதற்கான அதிகாரம் பொலிஸ் சார்ஜன்ட் பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஞானசார தேரர் விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் – சமன் ரத்னப்பிரிய

ஞானசார தேரர் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற...

2027ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்?

மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு முந்தைய அரசாங்கங்களே பொறுப்பு – பஃப்ரல் அமைப்பு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாக ஒத்திவைத்தமைக்கு...

பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு...

கிராமம் கிராமமாகச் செல்ல மொட்டுக் கட்சி முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமம் கிராமமாக முன்னெடுக்கப்படும் தொகுதிக் கூட்டங்கள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின்...

More like this