கிரிஷ் நிறுவன விவகாரத்தில் 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.




