Homeஉள்நாட்டு செய்திபுதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க விசேட சட்ட ஏற்பாடுகள்

புதிய தொழிலாளர் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க விசேட சட்ட ஏற்பாடுகள்

spot_img

புதிய தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும்போது மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் விசேட சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்குவது தொடர்பில் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற மன்றத்தினால் குறித்த முன்மொழிவுகள் தொழிலாளர் சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்த மன்றத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நாரஹேன்பிட்டி மெஹெவர பியச கட்டடத்தில் அமைந்துள்ள தொழிலாளர் அமைச்சில் வைத்து இந்த முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

மாற்றுத்திறனைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படுதல், ஆட்சேர்ப்பின்போது பாகுபாடு காட்டுதல், பதவி உயர்வு மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அநியாயமான முறையில் பணிநீக்கம் செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு தெளிவான சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் தங்களது பணிகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்ற நியாயமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதைத் தொழில் வழங்குநர்களின் சட்டப்பூர்வ கடமையாக மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் கீழ், பணியிடங்களில் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல், தேவையான உதவித் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குதல், தேவைக்கேற்ப வேலை நேரம் மற்றும் பணிமுறைகளை மாற்றியமைத்தல், தகவல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் அமைத்தல் உள்ளிட்ட விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அரச துறையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைமுறையில் உள்ள 3 சதவீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை வினைத்திறனுடன் அமுல்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

நாடளாவிய ரீதியில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான ஆரம்பகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் கீழ், பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களை...

2027ஆம் ஆண்டுக்கான நிதி 2028இல் பயன்படாது

ஒரு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதி, அந்த ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர்...

ராஜாங்கனை சத்தாரதன விளக்கமறியலில்

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில்...

வீரவங்ச மனைவிக்கு சிறை உறுதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று...

More like this