இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1968ஆம் ஆண்டு மாத்தளை, தேவஹுவவில் பிறந்த அவர், மாணவர் அரசியலின் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்து, 2000ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராகவும், தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவராகவும் விளங்கிய அவர், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியானார்.




