Homeஉள்நாட்டு செய்திஇந்தியா எல் நினோ தாக்கம்: இலங்கை இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

இந்தியா எல் நினோ தாக்கம்: இலங்கை இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

spot_img

இந்தியாவில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகைக் காலத்தில் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாற்று சந்தைகளை ஆராயவும் இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, உலர்ந்த மிளகாய் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதிப் பொருட்களையும் எவ்வித தடையுமின்றி நாட்டின் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலர்ந்த மிளகாய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, அதன் ஈரப்பதன் அளவு அதிகரித்துள்ளமையே காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) தரநிலைகளின்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உலர்ந்த மிளகாய் தொகுதிகளை விடுவிப்பதற்கு அவற்றின் ஈரப்பதன் அளவு 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

எனினும், இந்தியாவில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக, சில மிளகாய் தொகுதிகளில் ஈரப்பதன் அளவு 13 முதல் 14 சதவீதம் வரை காணப்படுவதால், அவற்றை ஏற்றிவந்த கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சந்தையில் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல என்றும், இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய் தொகுதிகளை தரநிலைகளுக்கு அமைவாக விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால், நாட்டிற்கு கிடைக்கும் மிளகாய் தொகுதிகளின் ஈரப்பதன் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எதிர்வரும் மார்ச் மாதம் வரை நடைமுறைப்படுத்தக்கூடிய இடைக்கால வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், விநியோகப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை நியாயமற்ற வகையில் அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அரசாங்கம் தலையிடும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் விலைகள் தீர்மானிக்கப்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலைமையைத் தவறாகப் பயன்படுத்தி நுகர்வோரைச் சுரண்ட முயற்சித்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவைகள் சபை ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

– ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு! தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும்...

வங்கி ஊடாகப் பரிவர்த்தனை செய்யத் தவறினால் முழுத் தொகைக்கும் வரி செலுத்த நேரிடலாம்!

ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளைப் பணமாக பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு...

ஆபத்தான இதை செய்தால் வாகன உரிமையாளரும் விளக்கமறியலில்

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக்...

மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

நாடுகளுக்கு இடையிலான எரிபொருள் விலைகளை ஒப்பிடும்போது, அந்தந்த நாடுகளின் மக்களின் தனிநபர் வருமானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்...

More like this

மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

– ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு! தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும்...

வங்கி ஊடாகப் பரிவர்த்தனை செய்யத் தவறினால் முழுத் தொகைக்கும் வரி செலுத்த நேரிடலாம்!

ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளைப் பணமாக பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு...

ஆபத்தான இதை செய்தால் வாகன உரிமையாளரும் விளக்கமறியலில்

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக்...