Homeஉள்நாட்டு செய்திஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது

spot_img

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இன்னும் 2018ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையை விடக் குறைவாகவே இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்துள்ள போதிலும், அதன் நன்மைகள் இன்னும் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதார நிலையிலும் உணரக்கூடிய அளவுக்குச் சென்றடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் நிலவிய எரிபொருள் வரிசைகள், மின்வெட்டு, 70 சதவீதம் வரை உயர்ந்த பணவீக்கம் மற்றும் சுமார் 20 சதவீதமாக அதிகரித்த வட்டி விகிதங்கள் போன்ற நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டு, ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சாதாரண அத்தியாவசியப் பொருட்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருட்களின் விலைகள் இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள போதிலும், சாதாரண மக்களுக்கு அதற்கேற்ற நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதே மக்களின் பார்வையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் உணரக்கூடிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வலுவான பொருளாதார வளர்ச்சி அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலைமை பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம் 7 முதல் 8 சதவீதம் வரை உயர வேண்டும் எனவும், தற்போது பொருளாதார வளர்ச்சி வீதம் 4.2 சதவீதமாக மட்டுமே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையை விடவும் குறைவாகவே இருப்பதாக தனநாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியின் ‘ஹிரு சலகுண’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மூடநம்பிக்கைகளைப் பரப்பும்...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்ற கருத்துக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும்...

More like this