Homeஉள்நாட்டு செய்திதிருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

spot_img

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ்

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பத்திரிகைகளில் வெளியிடப்படும் திருமண விளம்பரங்களில் சாதி குறிப்பிடப்படும் பகுதியை நீக்குவது குறித்தும் சமூகத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

திருமண விளம்பரங்கள் போன்ற விடயங்களைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும். இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை, இலங்கைச் சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் ஏராளமான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

மந்திரம், வசியம் உள்ளிட்ட விடயங்கள் முதல் சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு போலியான விளம்பரங்கள் வரை, சமூகத்தையும் இளம் தலைமுறையினரையும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக, எண்ணெய் ஒன்றைத் தடவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது போன்ற தவறான விளம்பரங்கள் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டே ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். எந்தவொரு சமூகமும் பின்னோக்கிச் செல்லாமல் முன்னேற்றத்தை நோக்கியே பயணிக்க வேண்டும்.

விளம்பரங்கள், கலை, ஊடகம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதற்காகவே ஊடக ஒழுக்க நெறிமுறைக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கும் தீர்வு காண முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்ற கருத்துக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும்...

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இன்னும் 2018ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையை விடக் குறைவாகவே இருப்பதாக பொருளாதார...

More like this