நெத்தலி மற்றும் கருவாடு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கோழி இறைச்சியில் குறைந்தளவு புரதச்சத்தே காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் மாசி இறக்குமதி வரியை 292 ரூபாவால் குறைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




