Lassana.com (Pvt) ltd க்குச் சொந்தமான துணை நிறுவனமான Lassana Innovations (Pvt) Ltd, சிறந்த தரமான குக்கீகளின் பிரத்தியேக வர்த்தக நாமமான ட்ரீட்ஸ் ஒப் சிலோன் ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இது இலங்கைக்கேயுரிய பாரம்பரிய சுவைகளுடன் தனித்துவமான உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது.
உலகம் முழுவதும் இலங்கை கறுவாப் பட்டை, கறுப்பு மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மற்றும் பிற சுவைகள் அடங்கிய இலங்கையின் சிறந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் குழு இணைந்து இந்த உயர்தர, ஏற்றுமதி தரத்திலான குக்கீகள் தயாரிக்கப்படுகின்றன.
இக் குக்கீகளின் அறிமுகத்தை அடையாளப்படுத்தும் வகையில், Lassana.com (Pvt) Ltd இன் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் லசந்த மாளவிகே, கொமர்ஷல் வங்கி PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்கவிடம், ‘ட்ரீட்ஸ் ஒப் சிலோன்’ குக்கீகளின் முதல் தொகுதியை அண்மையில் கையளித்தார்.
இலங்கை வரலாற்று ரீதியாக உலகின் சிறந்த மசாலா மற்றும் பாரம்பரியமான சுவைகளுக்காக அறியப்படுகிறது, ஆனால் இந்த சுவைகளைக் கொண்டு அதிசிறந்த உணவுகளை தயாரிப்பதில் எங்கள் நிபுணத்துவம் பற்றி சர்வதேச சந்தைகளில் மிகக் குறைந்த அறிவே உள்ளது. 100% உள்நாட்டு வணிக நிறுவனமாக இருப்பதால், இலங்கையின் சுவையான உணவுகளை உலகிற்கு எடுத்துச் செல்வது எங்களின் கனவாகும், மேலும் அந்த கனவை நனவாக்க பல வருடங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் விளைவே ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன் ஆகும்" என்று. Lassana.com (Pvt) Ltd இன் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் லசந்த மாளவிகே கூறுகிறார்.
Lassana Innovations ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன் வர்த்தக நாமத்தின் கீழ் 3 வகை குக்கீகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒவ்வொன்றும் முறையே இஞ்சி, மசாலா மற்றும் கறுவாப் பட்டை ஆகியவற்றின் முக்கிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டது. புதிதாக பேக் செய்யப்பட்ட இந்த குக்கீகளின் புத்துணர்ச்சி வாயில் நீர் ஊறவைக்கும். அவற்றின் சுவை, மசாலாப் பொருட்களின் தவிர்க்கமுடியாத நறுமணம் என்பனவற்றுடன் அவை இலங்கை மசாலாப் பொருட்களின் பாதுகாக்கப்பட்ட அனைத்து ஆரோக்கிய நலன்களுடன் வருகின்றன.
அனைத்து தயாரிப்புகளும் அதிநவீன வசதி கொண்ட ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன, உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செயல்முறை மிகவும் கடுமையான சர்வதேச தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றன. தயாரிப்புகள் முதன்மையாக மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உள்ள அனைத்து முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளிலும் கிடைக்கும். மேலும் ‘ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன்’ வகை விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்.
Lassana Innovation இன் செயற்பாட்டுத் தலைவர் யுகந்த சூரியராச்சி கூறுகையில், இந்த தனித்துவமான தயாரிப்பின் எல்லைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களிடம் ஆர்வமும் தொலைநோக்கு பார்வையும் இருந்தது, ஆனால் சில உண்மையான சர்வதேச தரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு கடின உழைப்பு மற்றும் முழுமையான ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்தோம். தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நீண்ட, உழைப்பை வழங்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புவதுடன், இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல முடிந்ததற்காக அனைவரையும் வாழ்த்த விரும்புகிறேன்.