web log free
May 03, 2024

‘ இன்னோவேசன்ஸின் ‘ டிரீட்ஸ் ஒவ் சிலோன்’ துவக்க விழா

லஸ்ஸன.கொம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் உபபிரிவான லஸ்ஸன இன்னோவேசன்ஸானது, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் தன்னுடைய சமீபத்திய புதிய துவக்கத்தின் வாயிலாக ஒரு பாரிய மைல்கல்லினை எட்டியுள்ளது. டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வெளியேறும் வாயிலில் அமைந்துள்ளதுடன் வெளியேறும் பயணிகளிற்கு அவர்களது அன்பிற்குரிய இலங்கையின் வாசனைத்திரவியங்களை கொள்வனவு செய்யவும் அதனை வெளிநாடுகளிற்கு எடுத்துச்செல்லவுமாக வாய்ப்பினை அளிக்கின்றது. இலங்கையர்கள் தங்களது தாய்நாட்டின் சுவையினை விரும்பினாலோ அல்லது வெளிநாட்டினர் இலங்கையின் உத்தியோகபூர்வ சுவையினை விரும்பினாலோ, டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது அத்தகைய பன்முக வாடிக்கையாளர்களிற்கும் தேவையானவற்றை வழங்குகின்றது.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் திறப்புவிழாவானது அதனை துவக்கி வைத்த இலங்கை விமானநிலைய மற்றும் விமானச்சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீஏ சந்திரசிறி மற்றும் லஸ்ஸன குழுமத்தின் தலைவர் / முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே மற்றும் பணிப்பாளர் பேரா. நீலிகா மாளவிகே மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்களுடன் பெருமைப்படுத்தப்பட்டது. இவ்வணிக வளாகத்தின் திறப்பு விழாவானது இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் என இருவருக்கும் இலங்கையின் செழுமையான வாசனைத்திரவியங்கள் மற்றும் சமையற்கலை நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தும் ஒரு மைல்கல்லாக அமைகின்றது.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்டங்களானவை இலங்கையின் கறுவா, மிளகு, ஏலக்காய், கராம்பு, மாசி மற்றும் ஏனைய கவனமாக தேர்வுசெய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளடங்கிய இலங்கையின் சிறப்பான நறுமணப்பொருட்களை கொண்டு கைகளால் கவனமாக தயாரிக்கப்பட்டனவாகும். இவ்வுயர்தர, ஏற்றுமதி தரத்திலான தின்பண்டங்களானவை மகிழ்ச்சிகரமான சமையல் அனுபவங்களை உறுதிப்படுத்தும் விதமாக, உள்ளுர் மற்றும் சர்வதேச நிபுணர்களது கூட்டு முயற்சியின் ஊடாக உருவாக்கப்பட்டனவாகும்.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்ட எல்லைகளிற்கு மேலதிகமாக, கொக்கிஸ், கவும், களு தொதல், எள் ரோல், பெனி கஜு, தேங்காய் டொவ்பி மற்றும் பலாப்பழ நொறுக்குகள் மற்றும் ஏனையன போன்ற பாரம்பரிய இலங்கை தின்பண்டங்களது பன்முகப்பட்ட தேர்வுகளிற்கும் இவ்வணிக வளாகம் வாய்ப்பளிக்கின்றது. லே டிரீட்ஸ் குக்கிஸ், டீ டைம் குக்கிஸ், சொக்கலேட் துண்டங்கள் மற்றும் ஆர்டிசன் சொக்கலேட்ஸ் உள்ளிட்ட லஸ்ஸன இன்னோவேசன்சின் லே டிரீட்ஸ் உற்பத்தி கூறுகளையும் வாடிக்கையாளர்கள் புதிதாக திறக்கப்பட்ட வணிகவளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

லஸ்ஸன குழுமத்தின் தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே அவர்கள், விமான நிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், “டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் எனும் வர்த்தக நாமங்கள் இலங்கையின் உத்தியோகப்பூர்வ சுவைகளை உலகிற்கு கொண்டுசெல்லும் எமது அர்ப்பணிப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நூறு சதவீதம் உள்ளுரில் மேற்கொள்ளப்பட்ட எமது வியாபாரம் குறித்தும் அனைத்து உலகளாவிய பின்னணியிலான தனிநபர்களிற்கும் எமது சுவைநயங்களது அபரிதமான சுவையையும் கைவினைத்திறத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் எமது அர்ப்பணிப்பினையும் முன்னிட்டு நாம் பெருமையடைகின்றோம்.” என்றார்.

லஸ்ஸன இன்னோவேசன்ஸின் செயற்றுறை தலைவர், யுகந்தா சூரியாராச்சி அவர்கள், தங்களது உயர் தரம் மற்றும் தனிச்சிறப்பான சுவை என்பவற்றை சிறப்புறுத்தி, டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் வர்த்தக நாமங்களது தனித்தன்மைகளை விளக்கி உரையாற்றினார். “எமது தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் நாவில் சுவையூறும் புத்துணர்ச்சி சுவையினையும், சுவையூட்டிகளது ஈர்க்கும் நறுமணங்களையும், மற்றும் இலங்கை சுவையூட்டிகளது பேணப்பட்ட ஆரோக்கிய நலன்களையும் வெளிப்படுத்தி உச்ச சுவையுணர் அனுபவத்தை அளிக்கின்றது” என்றார் சூரியாராச்சி அவர்கள்.

டிரீட்ஸ் ஒவ் சிலோன் தன்னுடைய உலகறிந்த சுவையூட்டிகளிலிருந்து அதிசிறந்த சுவையான உணவுகளை வடிவமைப்பதிலான தேசத்தின் நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்தி இலங்கையின் சயைமயற்கலையை சர்வதேச சந்தைக்கு பரிசளிக்கும் எண்ணத்தை மீளாக்கம் செய்வதினை நோக்காகக் கொண்டுள்ளது. பல வருட கடின உழைப்பும் தொழில் வேட்கையும் மிக்க, லஸ்ஸன இன்னோவேசன்ஸானது இக்கனவிற்கு டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் வர்த்தக நாமத்தினால் உயிரூட்டியுள்ளது.

உயர் தர நிர்ணயங்களை உறுதிப்படுத்துவதில், டிரீட்ஸ் ஒவ் சிலோனின் அனைத்து உற்பத்திகளும் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சிறப்பான மூலக்கூறுகளை பயன்படுத்தி அதிநவீன கூடங்களிலேயே உற்பத்திசெய்யப்படுகின்றன. டிரீட்ஸ் ஒவ் சிலோனின் உற்பத்திகளை உண்மையில் அதிசிறப்பானவையாகவும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவையாகவும் உருவாக்க, கடுமையான சர்வதேச தர நிர்ணயங்களை உற்பத்தி செயன்முறை கைக்கொள்கின்றது. உற்பத்திகள் மத்திய கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய சந்தைகளிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதிச்செய்யபடவிருந்தாலும், உள்ளுர் உபயோகத்திற்காக லஸ்ஸன.கொம், லஸ்ஸன புளொரா சில்லறை வணிக மையங்கள் மற்றும் நாடு முழவதிலுமான முன்னணி சூப்பர்மார்க்கெட் தொடர்களிலும் கிடைக்கப்பெறுகின்றன.