web log free
December 22, 2024

குறைவான விலையிலான மேலதிக சொகுசு அறைகளுடன் முதன்மைச் சேவைகளை வளப்படுத்தும் ராகம மெல்ஸ்டா வைத்தியசாலை

ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது தங்களது தேவைக்கேற்ற மேலதிக சொகுசு அறைகள்/கூடங்களுடன் அதன் வசதிகளிலான மற்றுமொரு விசேட வளப்படுத்தலை அறிவித்துள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள சொகுசு பிரிவானது சர்வதேச தரங்களுக்கு அமைவானதாகவும், கொழும்பிலுள்ள சிறந்த தனியார் வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் அதிநவீனமானதும் சௌகரியமானதுமான சேவைகளை வழங்குவதுமாகக் காணப்படும் அதேவேளையில், கொழும்பிலான சேவைகளில் ஒப்பிடக்கூடிய 30%-50% வரையில் குறைவானதாக, அணுகக்கூடியதும் இயலுமானதுமான செலவுத்தொகையையும் பேணுகின்றது.  

சந்தடிமிக்க கம்பஹா பகுதியில் ஒரு முதன்மை தனியார் வைத்தியசாலையான, ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது, சமுதாயத்திற்குள் -இலகுவாக அணுகக்கூடியதும் குறைவான விலையிலானதுமான முன்னணி சுகாதார சேவைக்காக- நீண்டகாலமாக நிலவிய கேள்வியை தீர்க்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக இவ்விரிவாக்க துவக்கத்தினை பூர்த்திசெய்துள்ளது. 

ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது, தேசமான்ய ஹரி ஜயவர்த்தன அவர்களால் தலைமைத்தாங்கப்படும், இலங்கையின் அதிஉச்ச வியாபார கூட்டான, மெல்ஸ்டா பிஎல்சியின் ஒரு பகுதியான, மெல்ஸ்டா ஹெல்த் துணை நிறுவனத்தினால் முழுமையாக உரிமம் கொள்ளப்படுகின்றது. ராகம பிரௌன்ஸ் வைத்தியசாலை என முன்பறியப்பட்ட, இவ்வைத்தியசாலையானது, மெல்ஸ்டா ஹெல்த்தினால் 2020 இல் முழுமையாக உரிமம்கொள்ளப்பட்டு ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையாக மறுவடிவமைக்கப்பட்டது. 

“மெல்ஸ்டா வைத்தியசாலையானது அனைத்து இலங்கையர்களிற்கும் குறைவான செலவில் உலகத்தரமான சுகாதார சேவைகளை வழங்கும் தூரநோக்குடன் வழிநடாத்தப்படுகின்றது. இத்தூரநோக்கத்தின் தொடர்ச்சியாக, பிரௌன்ஸ் குழுமத்திலிருந்து கையேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையின் மருத்துவ உட்கட்டுமானங்களை வளப்படுத்துவதற்காக 1..5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மெல்ஸ்டா வைத்தியசாலை அர்ப்பணித்துள்ளது.

புதிய சொகுசு அறைகளது துவக்கமானது இத்தொடர் மேம்படுத்தல் முயற்சிகளின் நவீன மைல்கல்லாக விளங்குகின்றது. மிகவும் குறைவான செலவீனத்தில் சிறப்பான சுகாதார சேவையை தங்களிற்கு அளிப்பதற்கான எண்ணிறைந்த மேம்படுத்தல் துவக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதனை அயலிலுள்ள எம்முடைய பெருமதிமிக்க வாடிக்கையாளர்களிற்கு அறிவிப்பதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார் ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி கே. தியாகராஜா அவர்கள். 

புதிதாக இணைக்கப்பட்ட சொகுசு வசதிகள் குறித்து கூறும்பொழுது, ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையின் பொது முகாமையாளரான, திருமதி. ரொஷிட்டா நிரூஷன் அவர்கள், “குறுகிய காலத்திலேயே, ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது கம்பஹா வலயத்தின் வைத்தியகூட நாமமாக பரிணமித்துள்ளது. நாம், உயர்தர தொழிநுட்பங்களின் உதவியுடன் திறன்வாய்ந்த தொழிற்சார் வல்லுநர்களினால் நிர்வகிக்கப்பட்டு, அதிஉச்ச சுகாதார சேவைகளை அனைவருக்கும் குறைவான செலவினத்தில் வழங்குவதற்கான சேவை நியமங்களை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளோம். எம்முடைய புதிய சொகுசு வசதிகளானவை இவ்வர்ப்பணிப்பினை உள்ளடக்கியுள்ளதாகவும், அதிலும் ஒப்பிடுகையில் 30%-50% வரையில் குறைவானதாகவும் அதிசிறப்பானதாகவும் காணப்படுகின்றது. 

அதிநவின மருத்துவ பிணியாய்வு தொழிநுட்பத்துடனும் உயர்தர மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை கருவிகளுடனுமாக, ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது அதனது நோயாளர் மைய அணுகுமுறைக்காக நன்கறியப்பட்டுள்ளது. உட்கட்டுமானம், தொழிநுட்பம், வளங்கள் மற்றும் தர அபிவிருத்தி என்பவற்றிலான வைத்தியசாலையின் தொடரும் முதலீடுகளானவை நாட்டின் விரைவாக வளரும் சுகாதார சேவை வழங்குநர்களில் ஒருவராக இது உருவாக உந்துதலளித்துள்ளது.  

இணக்கமான பல்நோக்கு பொது சுகாதார சேவை மையமாக செயற்படும், ராகம மெல்ஸ்டா வைத்தியசாலையானது, விரிந்த புவியியல் பகுதிகளிற்கும் அப்பாற்பட்டு ஒரு பரந்த சமுதாயத்திற்கே சேவைகளை வழங்குகின்றது. இவ்வைத்தியசாலையானது, சுகாதார சேவையில் உயர்தர நியமங்களை பேணுவதிலான அதனது அர்ப்பணிப்புக்களில் தனிச்சிறப்பானதாக திகழ்கின்றது. குறிப்பிடத்தக்கதாக, இலங்கை தரநியம நிறுவகத்திடமிருந்து சான்றிதழினைப் பெறுகின்ற முதல் சுகாதார நிலையமாக விளங்கும் அதனது அதிசிறந்த நிலையை அடைந்துள்ளதுடன், அதன் தனிச்சிறப்பான தன்மையானது தேசிய தராதர விருதுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மெல்ஸ்டா ஹெல்த் குறித்து:

பெருமைமிகு இலங்கை வர்த்தக கூட்டமைப்பான மெல்ஸ்டாகோர்ப் பிஎல்சியின் ஒரு மூலோபாய விரிவாக்கமாக, 2017 இல் தாபிக்கப்பட்ட, மெல்ஸ்டா ஹெல்த்தானது, இலங்கையின் சுகாதார சேவைகள் வரைபடத்தினையே புரட்சிக்குள்ளாக்க தன்னை அரப்பணித்துக்கொண்டுள்ளது. கம்பனியானது தற்போது மூன்று முக்கிய பிரிவுகளாக செயற்படுகின்றது: மெல்ஸ்டா ஹொஸ்பிடல்ஸ்; மெல்ஸ்டா ஆய்வகங்கள்; மற்றும் மெல்ஸ்டா மருந்தகங்கள்.

நவீன மருத்துவ வசதிகள், அதிநவீன தொழிநுட்பம் மற்றும் நோயாளர் மைய அணுகுமுறை என்பவற்றுடன், மெல்ஸ்டா ஹொஸ்பிடல்ஸானது சர்வதேச நியமங்களுடன் இயைபுடையதான அதியுயர் சுகாதார சேவைகளை வழங்குவதனை நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேகமாக தனித்துநிற்கும் ஆய்வக வலையமைப்பான, மெல்ஸ்டா ஆய்வகமானது நோயாளர்களது சிறப்பான பலன்களிற்கு பங்களிக்கும் முகமாக, >துல்லியமானதும் விரைவானதுமான பெறுபேறுகளை உறுதிப்படுத்த, உயர்தர மருத்துவ நோய்நிர்ணய தொழிநுட்பங்களை பயன்படுத்துகின்றது. சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் பொருந்துமான நிறுவனத்தின் அணுகுமுறையை பூர்த்திசெய்யும் முகமாக, மெல்ஸ்டா மருந்தகங்களானவை கிடைக்கக்கூடிய விலைகளில் உயர் தரத்திலான மருந்தக உற்பத்திகளையும் சுகாதார சேவை கருவிகளையும் இலங்கையர்களிற்கு வழங்குவதனை உறுதிப்படுத்த விளைகின்றன..   

மெல்ஸ்டா ஹெல்த்தானது, வியாபார நிறுவனங்களது ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளுடனாக, இலங்கை மக்கள் உலகத்தர சுகாதார சேவைகளை முதனிலையில் அணுகுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்தினை நனவாக்க தன்னை அர்ப்பணித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd