இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் முன்னணி நிறுவனமான சந்தனாலேப, அதன் ஆயுர்வேத குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளதன் மூலம், தனது 30 ஆண்டுகால பயணத்தின் மற்றுமொரு அத்தியாயத்தை கொண்டாடுகின்றது.
சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் வெளியீடுட்டு விழா, வியாங்கொடையில் உள்ள நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.
நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இவ்வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை, Sanjeewaka Ayurvedic Products Pvt Ltd தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமதிலக இங்கு எடுத்துக் கூறினார்.
அவர் தெரிவிக்கையில், "நம்பிக்கை, தரம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு பாத்திரமாக சந்தனாலேப விளங்குகின்றது. எமது புதிய குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம், ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகளை அரவணைப்பதில் பெருமிதம் கொள்ளும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, அந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் காலத்தால் அழியாத ஆயுர்வேத ஞானத்தால் ஈர்க்கப்பட்ட எமது நிபுணத்துவத்துவம் மூலம், குழந்தை பராமரிப்பின் தரநிலைகளை மீள்வரையறை செய்யும் தெளிவான தூர நோக்குடன், இந்த புதிய தயாரிப்பு வகைகளில் சந்தனாலேப நுழைகிறது. சந்தனாலேப குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், எதிர்வரும் நாட்களில் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்றார்.
சந்தனாலேப குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளில் பேபி சோப், பேபி க்ரீம், பேபி கொலோன் ஆகியன உள்ளடங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் நம்பகமான ஆயுர்வேத மூலப்பொருட்களின் சாரத்துடன் உரிய கலவையுடன், குழந்தைகளுக்கு உகந்த ஆறுதலையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. பேபி சோப் வகைகளில் மில்க் அன்ட் ஹனி பேபி சோப், கொஹொம்ப அன்ட் வெனிவெல் சோப், ரத்மல் அன்ட் பொக்குருவாட பேபி சோப் போன்ற வகைகள் காணப்படுகின்ன. சந்தனாலேப பேபி க்ரீம் ஆனது, பால் மற்றும் தேனின் நலன்களை கொண்டுள்ளது. அத்துடன் அதன் கொலோன்கள், சந்தன மரத்தின் நம்பகமான நறுமணம் உட்செலுத்தப்பட்டதாக காணப்படுகின்றன.
ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களின் சந்தையில் ஒரு முன்னோடியாகவும், 100% இலங்கை வர்த்தக நாமம் எனும் பெருமையுடனும் உள்ள சந்தனாலேப, பெற்றோர்-குழந்தை பந்தத்தின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தை பராமரிப்பு உற்பத்தி வகைகளில் காணப்படும் அதன் ஒவ்வொரு தயாரிப்பும் இந்த உறவை மேம்படுத்தவும், மென்மையான தருணங்களை உருவாக்கவும், குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்யவுமாக மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனாலேப தனது குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை, பரபேன் மற்றும் சல்பேட் அற்றவையாக பேணுவதோடு, உலகளாவிய IFRA நறுமண தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. அதன் அனைத்து உற்பத்திச் செயன்முறைகளும், ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22716, Cosmetic GMP சான்றிதழ் உள்ளிட்ட மிக உயர்ந்த தரங்களை பேணுகின்றன.
1948 ஆம் ஆண்டு, வியாங்கொடையில் உள்ள பிரபல ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் ஆர்.டி.பி. ஜயரத்ன இந்த வர்த்தக நாமத்திற்கு அடித்தளமிட்டதைத் தொடர்ந்து, சந்தனாலேபவின் பாரம்பரியம் ஆரம்பமானது. அந்த வகையில் இன்று, இலங்கையில் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் முன்னோடியாக விளங்கும் சந்தனாலேப, சிறந்த அழகுசாதன வர்த்தகநாமமாகவும், நாட்டின் மிகப்பெரிய ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளராகவும் பரிணமித்துள்ளது. பாரம்பரிய ஞானம் மற்றும் நவீன தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை இணைத்து, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறையில் சந்தையில் ஒப்பிட முடியாத தலைவராக சந்தனாலேப விளங்குகின்றது.
தரம் மற்றும் சிறப்பிற்காக அது கொண்டுள்ள அர்ப்பணிப்பு மூலம், சந்தனாலேப தயாரிப்புகள் நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் பாரம்பரிய ஞானத்தை உள்ளடக்கியது. பேபி க்ரீம் மற்றும் பேபி கொலோன் வழங்கும் இனிமையான அரவணைப்பு முதல் குழந்தை சோப்புகளில் காணப்படும் தூய்மைப்படுத்தும் மென்மையான தொடுகை வரை, ஒவ்வொரு தயாரிப்பும் பெற்றோருக்கான உங்கள் பயணத்தில் நம்பகமான பங்காளியாக இருக்கும் எனும் வாக்குறுதியை அது பிரதிபலிக்கிறது.