மக்கள் வங்கி தனது யூ டியூப் தளமானது 50,000 சந்தாதாரர்கள் என்ற சாதனை இலக்கினை எட்டியுள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவித்துள்ளதுடன், நாட்டில் எந்தவொரு நிதி நிறுவனமும் கொண்டுள்ள அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை இலக்கினை இலங்கையில் எட்டியுள்ள முதலாவது நிதி நிறுவனம் என்ற வகையில், டிஜிட்டல் வழியிலான ஈடுபாட்டைப் பேணுவதில் தான் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் மக்கள் வங்கி இதன் மூலமாக நிரூபித்துள்ளது.
வங்கித்துறையில் எதிலும் முன்னோடியாகத் திகழ்வதில் பெயர்பெற்றுள்ள மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) அடங்கலாக டிஜிட்டல் தளங்களை தொடர்ச்சியாக உள்வாங்கி வந்துள்ளது.
திறன்மிக்க தொடர்பாடல் மற்றும் வாடிக்கையாளர்களை எட்டுவதில் பல்வகைப்பட்ட சமூக ஊடக தளங்களை உபயோகப்படுத்துவதில் வங்கியின் அர்ப்பணிப்பை யூ டியூப் தளத்தில் அதன் சாதனை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
மக்கள் வங்கியின் யூ டியூப் தளமானது பல்வேறுபட்ட தகவல் விபரங்களைக் கொண்டுள்ள ஒரு மையமாக மாறியுள்ளதுடன், நிதியியல் தொடர்பான அறிவு மற்றும் வங்கியின் செயல்பாடுகள் தொடர்பில் பெறுமதிக்க ஆழமான விடயங்களை வழங்குகின்றது.
சமூக ஊடக தளங்களை உபயோகிக்கும் வங்கியின் மூலோபாயமானது வாடிக்கையாளர்களுடனான இடைத்தொடர்பு மற்றும் தொடர்பாடல் ஆகியன மாற்றம் கண்டு வருகின்ற போக்கினை அனுமானித்து, அவற்றை முற்கூட்டியே உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையை பிரதிபலிக்கின்றது.