web log free
December 25, 2024

மாதாந்தம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ 10 இலட்சம் அனுசரணை - Ragama Melsta Hospital மூலம் Melstacorp PLC

 

தொழிலதிபரான தேசமான்ய ஹரி ஜயவர்தனவின் தலைமையின் கீழ் இயங்கும் இலங்கையின் மிகப்பெரும் பல்துறை கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Melstacorp PLC நிறுவனம், Ragama Melsta Hospital இலுள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மையத்தின் மூலம், மிகச் சிறந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Ragama Melsta Hospital இல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படும், தகுதியான சிறுநீரக நோயாளிக்கு மாதாந்தம் ரூ. 10 இலட்சம் (ரூ. 1,000,000) நிதியுதவியை வழங்கவுள்ளது.

ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படும் தகுதியுள்ள நோயாளிக்கு வழங்கப்படும் ரூ. 10 இலட்சம் பெறுமதியான அனுசரணையானது, குறித்த அறுவை சிகிச்சை மற்றும் அது தொடர்பான செலவுகளில் 30% தொடக்கம் 35% வரையான செலவை ஈடுசெய்யும். ஒரு தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தின் நிதிப் பின்னணியில், குறித்த அறுவை சிகிச்சைக்கு ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில், ஒரு சுயாதீனக் குழுவொன்று ஒவ்வொரு மாதமும், மிகவும் தகுதியான நோயாளியை உன்னிப்பாக மதிப்பீடு செய்து தெரிவு செய்யும். அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கமைய, சுகாதார அமைச்சின் அனுமதியைத் தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுசரணையை இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நோயாளி பெறுவார்.

அண்மைக் காலமாக, இலங்கையில் சிறுநீரகம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கலான நடைமுறையுடன் தொடர்புடைய நிதிச் சுமையானது, அரசாங்க சுகாதார சேவைகளைப் பாதித்துள்ள பொருளாதார நிலைமைகளால் மேலும் மோசமடைந்து, பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த உயிர் காக்கும் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதை சவாலாக மாற்றியுள்ளது.

நாம் நேரடியாக அறிந்துள்ளோம். அதனாலேயே, Melstacorp PLC இன் தலைமைத்துவம் அதன் நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்த முடிவு செய்து, தகுதியான நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான இந்த தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது Melstacorp PLC நிறுவனத்தின் ‘Responsible Diversity’ (பொறுப்பான பன்முகத்தன்மை) எனும் பரந்த தூர நோக்குடன் ஒன்றிணைவதோடு, Melsta Health உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை அது எதிரொலிக்கிறது." என்றார்.

Ragama Melsta Hospital நிறைவேற்றுப் பணிப்பாளரும் Melsta Health நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் கே. தியாகராஜா இறைவன் இது பற்றி தெரிவிக்கையில், "இத்திட்டத்தின் தனித்துவமான விடயம் யாதெனில், இது ஒரு குறித்த காலப் பகுதிக்கு உட்பட்டதல்ல என்பதாகும். Ragama Melsta Hospital தனது சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மையத்தை முன்னெடுத்துச் செல்லும் வரை, தகுதியான நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்த உதவியை வழங்க நாம் உறுதியாக உள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒரு தகுதியான நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் மகிழ்ச்சியின் ஒரு பங்காளராக நாம் இருப்போம். சந்தேகத்திற்கு இடமின்றி, இது ஒரு நிறுவனத்திற்கு மிகப்பெரிய கௌரவமாகும்." என்றார்.

2020 இல் தனது வர்த்தகநாம பெயரை மீள் வடிவமைத்ததிலிருந்து, Melsta Health நிறுவனமானது, அதன் Ragama Melsta Hospital வைத்தியசாலையை மேம்படுத்துவதற்கு அதிகளவான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையம், அதன் மேம்பட்ட வசதிகள், அனுபவம் வாய்ந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைகளில் 100% வெற்றி விகிதம் ஆகியவற்றிற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இது தொடர்பில் Ragama Melsta Hospital பொது முகாமையாளர் திருமதி றொஷிற்றா நிரோஷன் தெரிவிக்கையில், "Melsta Hospitals உள்ள சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மையமானது, நாட்டில் காணப்படும் இவ்வாறான மையங்களில் மிகவும் மேம்பட்ட மற்றும் புகழ் பெற்ற மையங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஒரு பிராந்திய வைத்தியசாலையாக இருந்த போதிலும், யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரை நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் எமது வைத்தியசாலையின் மருத்துவ உதவியை நாடுவது, எமது வெற்றிக்கு மிகப் பெரும் சான்றாகும். மிக வெற்றிகரமான சிறுநீரக சத்திரசிகிச்சைகளுக்கு அப்பால், நோயாளிகளுக்கு

மிகவும் கட்டுப்படியான விலையிலான dialysis (குருதி சுத்திகரிப்பு) சேவையை வழங்குவதன் மூலம் சிறந்த சேவை மையமாகவும் புகழ் பெற்றுள்ளது. இந்த புதிய சமூகப் பொறுப்பு (CSR) முயற்சியைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, தகுதியுள்ள இலங்கையர்களின் சுகவாழ்வுக்கான எமது பணி நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறோம்." என்றார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுசரணை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதை எளிதாக்க, 0776 137 142 எனும் பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை Ragama Melsta Hospital அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றி அறிந்து கொள்ள, அலுவலக நேரத்தில் (வேலை நாட்களில் மு.ப. 9.00 - பி.ப. 5.00) Melsta Hospitals மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம் அல்லது மருத்துவமனைக்கு நேரடியாக விஜயம் செய்யலாம்.

Melsta Health பற்றி: 

2017இல் நிறுவப்பட்ட இலங்கையின் பெருமைக்குரிய வணிக நிறுவனமான Melstacorp PLC நிறுவனத்தின் மூலோபாய விரிவாக்கமான Melsta Health, இலங்கையின் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது Melsta Hospitals, Melsta Laboratories, Melsta Pharmacy என 3 முக்கிய சுகாதாரப் பிரிவுகளில் செயற்பட்டு வருகிறது. அதி நவீன மருத்துவ வசதிகள், அதி நவீன தொழில்நுட்பம், நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம், சர்வதேச தரத்துடன் இணைந்த உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதை Melsta Hospitals நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேகமான ஆய்வுகூட வலையமைப்பான Melsta Laboratories, மேம்பட்ட நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், துல்லியமான மற்றும் சரியான நேரத்திலான அறிக்கைகளை வழங்குகின்றது. இதன் மூலம், நோயாளிகள் சிறந்த முடிவை பெற உதவுகிறது. சுகாதாரம் மற்றும் சுகவாழ்வு தொடர்பான இக்குழுமத்தின் விரிவான அணுகுமுறையை முழுமைப்படுத்தப்படுத்தியவாறு, இலங்கையர்களுக்கு உயர் தர மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கட்டுப்படியான விலையில் Melsta Pharmacy வழங்குகின்றது.

இந்த வணிகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை இலங்கையர்கள் தங்குதடையின்றி பெறுவதை உறுதி செய்வதற்கான தனது நோக்கத்தை நிறைவேற்ற Melsta Health தன்னை அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd