இலங்கையில் பொது காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான HNB General Insurance, WTW இனை முக்கிய ஆலோசகராக செயற்படுத்துவதன் மூலம், WTW இன் ResQ Financial Reporter (FR) தீர்வை நடைமுறைப்படுத்திய முதல் உள்ளூர் பொதுக் காப்புறுதி நிறுவனம் எனும் பெயரை பெற்று, சர்வதேச நிதி அறிக்கை தரநிலை (IFRS) 17 இற்கு இணங்குவதற்கான தனது பயணத்தில் முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
WTW இன் ResQFR ஆனது, IFRS17 நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதற்கான, திறனான, நெகிழ்வான கட்டமைப்பை வழங்குகின்ற ஒரு தீர்வாகும் என்பதுடன், வெளிப்படுத்துகை தேவைகளையும் அது ஆதரிக்கிறது. ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அறிக்கை செயன்முறைகளை மேற்கொள்ளும்போது காப்புறுதி வழங்குனர்களுக்கு நேரத்தையும் வேலையையும் மீதப்படுத்துகிறது. IFRS 17 தரநிலையானது, 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.
இந்த புதிய தரநிலையானது, காப்புறுதிப் பொறுப்புகளை அளவிடுவதற்கும், நிதி அறிக்கையிடலில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை ஏற்படுத்துவதற்கும் நியாயமான மதிப்பீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு காப்புறுதி வழங்குனர்களை கட்டாயப்படுத்துகிறது. HNB பொதுக் காப்புறுதியின், ResQFR புத்தாக்க தழுவலானது, சர்வதேச ரீதியான சிறந்த நடைமுறைகளை முன்கூட்டியே ஏற்றுக்கொள்வதற்கான அதன் சிறந்த உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. இந்த தொகுதியானது, IFRS 17 இன் கீழ் அதன் நிதி செயற்றிறனைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள் மற்றும் திறன்கள் மூலம் நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.
HNB General Insurance Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி, சித்துமின ஜயசுந்தர இது குறித்து தெரிவிக்கையில், “WTW இன் ResQFR தீர்வை தழுவுவதில், இலங்கையில் உள்ள பொதுக் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையில் முன்னோடியாக இருப்பதானது, எமது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். இந்த மூலோபாய முதலீடானது, IFRS 17 இன் இணக்கத்திற்கான எமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எமது நிதி வெளிப்பாடுகளில் துல்லியம் மற்றும் திறந்த தன்மையை உறுதி செய்கிறது. அதிகரித்து வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் பிரிவில் வழிநடத்துவதற்கும் எமது மூலோபாய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குI ம் ஒரு முக்கியமான சொத்தாக ResQFR இருக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.
நிதி அறிக்கைக்கான புதிய தேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், காப்புறுதித் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை IFRS 17 ஏற்படுத்துகிறது. HNB பொதுக் காப்புறுதியானது, ResQFR இனை ஒருங்கிணைப்பதன் மூலம், பல பலன்களைப் பெறும். மிகவும் வலுவான மற்றும் திறனான நிதி அறிக்கை, மேம்படுத்தப்பட்ட தரவு முகாமைத்துவம், பகுப்பாய்வு திறன்கள், நிதி வெளிப்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, நிலையானதன்மை மற்றும் சந்தையில் போட்டித்தன்மை ஆகியன இவற்றில் அடங்குகின்றன.
HNB பொதுக் காப்புறுதி பிரதம செயற்படுத்தல் அதிகாரி நளின் சுபசிங்க இது பற்றி தெரிவிக்கையில், "WTW இன் ResQFR இனை நடைமுறைப்படுத்துவதானது, HNB பொதுக் காப்புறுதியின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. IFRS 17 இன் கீழ் துல்லியமான நிதி அறிக்கையிடலுக்கான சிறந்த தீர்வுகளை தழுவுவதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது. ResQFR மூலம் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க நாம் நன்கு தயார் நிலையில் உள்ளதோடு, எமது செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்றிறனையும் பேணுகின்றோம்." என்றார்.
WTW இந்தியா மற்றும் இலங்கையின் காப்புறுதி ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப தலைவர் விவேக் ஜலான் இது பற்றி தெரிவிக்கையில், "ResQFR ஆனது, கணிப்பீடு மற்றும் தரவு முகாமைத்துவ தீர்வாகும். இது IFRS 17 இன் சிக்கலான தன்மையை பொறுப்பேற்று பேணுவதால், காப்புறுதி நிறுவனங்கள் தமது வணிகத்தின் முக்கிய செயற்பாடுகளில் கவனம் செலுத்த முடியும். இது P&C காப்புறுதி வழங்குனர்களுக்கு IFRS 17 ஐ விரைவாக செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. HNB பொதுக் காப்புறுதியானது, WTW இனை தெரிவு செய்ததிலும், IFRS 17 இணக்கத்தை நோக்கிய அவர்களது பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக எமது தீர்வைத் தேர்ந்தெடுத்துள்ளமை தொடர்பிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், HNB பொதுக் காப்புறுதி அதன் நிதி அறிக்கையிடல் நோக்கங்களை திறம்பட அடைய முடியும் என நாம் நம்புகிறோம்." என்றார்.
HNB General Insurance பற்றி
HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான, HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB General Insurance உறுதி பூண்டுள்ளது.
WTW பற்றி
WTW இன் காப்புறுதி ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பிரிவானது, உலகளாவிய ரீதியில் 35 சந்தைகளில் 1,600 ஊழியர்களைக் கொண்டு இயங்குகின்றது. இது முதன்மையாக காப்புறுதித் துறைக்கு ஆலோசனை, தீர்வுகள், மென்பொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் முன்னணியில் திகழ்கின்றது. நிதி மற்றும் ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல், நிறுவன இடர் மற்றும் மூலதன முகாமைத்துவம், M&A மற்றும் நிறுவன மறுசீரமைப்பு, தயாரிப்புகள், விலை நிர்ணயம், வணிக முகாமைத்துவம் மற்றும் மூலோபாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இடர் மற்றும் மூலதனத்தை நிர்வகிக்கவும், வணிக செயற்றிறனை மேம்படுத்தவும் போட்டி மிக்க நன்மைகளை உருவாக்கவும் அதன் ஆலோசனை சேவைகள் உதவுகின்றன.