web log free
October 23, 2024

People Development Awards 2023/24 இல் வெள்ளி விருதைப் பெற்ற HNB பொதுக் காப்புறுதி

இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் (SLITAD) சமீபத்தில் நடத்தப்பட்ட, மக்கள் மேம்பாட்டு விருதுகள் 2023/24 இல் (People Development
Awards 2023/24) HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் மதிப்புமிக்க வெள்ளி விருதைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக
போட்டியிட்ட வலுவான 19 நிறுவனங்களின் வரிசையில், ஒரேயொரு பொதுக் காப்புறுதி வழங்குனர் எனும் வகையில HNBGI நிறுவனம் தனித்துவம்
பெறுகின்றது.

SLITAD மக்கள் மேம்பாட்டு விருதுகள் என்பது ஊழியர்களின் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைக் கொண்டாடும் ஒரு வருடாந்த
நிகழ்வாகும். இது விரிவான மனித வள மேம்பாட்டு (HRD) முயற்சிகளில் மூலோபாய ரீதியாக முதலீடு செய்பவர்களை அங்கீகரிக்கிறது. உலகளாவிய
மற்றும் பிராந்திய ரீதியான சிறந்த நடைமுறைகளுடன் இணைந்து, வளர்ச்சி, புத்தாக்கம், மனிதவள உத்திகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை
ஊக்குவிக்கும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுக்கான மதிப்பீட்டுச் செயன்முறையானது, வணிகம், கற்றல் செயற்பாடு மற்றும் மேம்பாடு, மக்கள் முகாமைத்துவம், தலைமைத்துவம்
மற்றும் முகாமைத்துவம், முகாமைத்துவ திறன், அங்கீகாரம், வெகுமதி போன்ற பல்வேறு மூலோபாய அம்சங்களை மையமாகக் கொண்டு, மிகக்
கூர்மையாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது. மதிப்பீட்டுச் செயன்முறையின் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை
உறுதி செய்யும் வகையில், சிரேஷ்ட கணக்காய்வாளர்களால் நடத்தப்படும் சுயாதீன கணக்காய்வு நடவடிக்கைகள் மூலம் வெற்றியாளர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

HNB பொதுக் காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர இது பற்றித் தெரிவிக்கையில், "SLITAD People Development
Awards இல் வெள்ளி விருதைப் பெறுவதில் நாம் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரமானது, எமது மனிதவள செயன்முறைகளை விரிவான பணியாளர்
மேம்பாட்டுடன் சீரமைப்பதில் HNBGI நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மக்கள் (ஊழியர்கள்) கையாளல்
விடயத்தில் நாம் கொண்டுள்ள உத்திகள் அது மாத்திரமன்றி வணிகச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக செம்மைப்படுத்துவதன் மூலம், நாம்
தனிமனித வளர்ச்சியை மட்டும் மேம்பாடடையச் செய்யவில்லை என்பதோடு, சிறந்த கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றையும்
மேம்படுத்துகிறோம். இது காப்புறுதித் துறையில் ஒரு முன்னோடி எனும் எமது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது என்றார்.


HNB பொதுக் காப்புறுதியின் மனிதவளப் பிரிவின் தலைவர் மல்ஷா முனசிங்க தெரிவிக்கையில், “மக்கள் மேம்பாட்டு தொடர்பான இந்த விருதை
வென்றமையானது, எமது குழு உறுப்பினர்களை மேம்படுத்தவும் வலுவூட்டவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இது
அங்கீகாரம் மட்டுமல்ல, மக்கள் (ஊழியர்கள்) வளரவும், கற்றுக்கொள்ளவும் அவர்களின் முழுத் திறனை அடையக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு நாம்
கொண்டுள்ள மதிப்புகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு அங்கீகாரமாகும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை எமது நிறுவனத்தின்
கட்டமைப்பில் உட்பொதிக்கப்பட்ட ஒரு கலாசாரத்தை உருவாக்குவதில் எமது கவனம் உள்ளது. இந்த விருது எமது முகாமைத்துவத்தின் கூட்டு முயற்சி
என்பதோடு, ஒவ்வொரு பணியாளரின் வளர்ச்சி மற்றும் சிறந்து விளங்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்புமாகும்." எனறார்.

இந்த அங்கீகாரம் HNBGI நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது நெகிழ்ச்சி மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களை
உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிறுவனம் அதன் ஊழியர்கள் மீத தொடர்ச்சியாக
முதலீடு செய்து தனது உத்திகளைச் செம்மைப்படுத்துவதால், HNBGI அதன் அனைத்து முயற்சிகளிலும் புத்தாக்கம், வலுவூட்டல் மற்றும் சிறந்து
விளங்குவதன் மூலம் வெற்றியை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

HNB General Insurance பற்றி:


HNB பொதுக் காப்புறுதியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத
மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கின்ற அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். HNB
Assurance PLC இன் துணை நிறுவனமமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance ஆனது, பரந்த அளவிலான கிளை
வலையமைப்பின் மூலம் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவை வழங்கலை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’
இன் காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டின் மூலம், புத்தாக்கம், சிறந்த உபசரிப்புடன், பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க HNB
General Insurance உறுதி பூண்டுள்ளது.