web log free
November 21, 2024

20 வருட வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் துறைசார் தலைமைத்துவத்தை பதித்திருக்கும் SDD பொலிமர் (Pvt) Ltd.

இலங்கையின் முன்னணி பிளாஸ்ரிக் மூலப் பொருள் விநியோகத்தர் மற்றும் வழங்குநரான SDD பொலிமர் (தனியார்) நிறுவனமானது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் மிகப்பிரம்மாண்ட நிகழ்வொன்றுடன் சமீபத்தில் தனது 20வது வருட பூர்த்தியை கொண்டாடியது.

ஸ்தாபகர்களான திரு. திருமதி.ஜெயசீலன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டமானது, இலங்கையின் பொதியிடல் மற்றும் பொலிமர் துறையின் முன்னிலை கம்பெனியாக நிறுத்துவதற்கு உந்திய இரு தசாப்தகால புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் வலுவான பங்காண்மை என்பவற்றை பதிவு செய்வதற்கு விசேட விருந்தினர், உயர்மட்டத்தினர், தொழில்துறை வித்தகர்கள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பணியாட்தொகுதியினரை ஒருங்கே கொணர்ந்திருந்தது.

2004 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட, SDD பொலிமர் ஆனது பொலிமர் துறையில் சிறியதொரு தொழில்முயற்சியிலிருந்து முன்னணி பங்காளராக வளர்ந்துள்ளது. பெட்ரோகெமிக்கல் உற்பத்திகளில் விசேடத்துவம் வாய்ந்த கம்பெனியானது பிளாஸ்ரிக் கைத்தொழில் துறையின் பல்வேறு துறைகளிற்கும் வசதியளிக்கும் Polypropylene (PP), High-density Polyethylene (HDPE), Low-density Polyethylene (LDPE), Linear Low-density Polyethylene (LLDPE), Polystyrene (PS), Masterbatches, Additives, Fillers, and Compounds என்பன அடங்கலாக பரந்தளவிலான பிளாஸ்ரிக் மூலப் பொருட்களை வழங்குகின்றது.

இந்நிகழ்வானது SDD பொலிமரின் சாதனைகளைக் கொண்டாடியதுடனல்லாமல் கம்பெனியின் பயணத்தில் உந்துதலாக விளங்கிய வழங்குநர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியையும் தெரிவித்திருந்தது. இலங்கையின் பொதியிடல் துறையின் தனிச்சிறப்பானவரும் Premium Packaging Solutions Pvt Ltd. இன் Chairman / Managing Director திரு.ரொஹான் விஜேசிங்க, மற்றும் Polypack Secco Ltd. இன் Commercial Manager திரு. அலெக்ஸ் சமரரத்ன முதலிய துறைசார் வித்தகர்கள் SDD பொலிமரின் அபரிதமான வளர்ச்சி மற்றும் கைத்தொழில் துறையில் அதன் பங்களிப்பு என்பவற்றை பிரதிபலிக்குமாறு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.

Supreme Petrochem Ltd, India இன் Sr. Vice President திரு.ரங்கராஜன், Plastiblends India Ltd இன் Vice Chairman / Managing Director திரு.வருண் காப்ரா, மற்றும் SDD பொலிமரின் ஆலோசகர் திரு. ரொமேஷ் மொராயஸ் (Formerly of Finlays Colombo Ltd. இல் முன்னாள் பணியாற்றியவர்) ஆகியோர் அடங்கலாக பங்காளர்களின் உரைகள் கம்பெனியின் புத்தாக்கம், தரம், மற்றும் நிலையான தன்மை என்பவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், ஸ்தாபகர் திரு. ஜெயசீலனின் சகோதரரான திரு. குணசீலன் கடந்த வருடங்களில் SDD பொலிமரின் வெற்றியை முன்னோக்கி கொண்டுசென்ற தொலைநோக்கு மற்றும் பெறுமதிகளை குறிப்பிட்டு, ஸ்தாபகர்களின் நிலைப்பாட்டிலிருந்து உரையொன்றினை வழங்கினார்.

பாராட்டு தெரிவிக்கும் முகமாக, கம்பெனியின் வெற்றிக்கான அயராத பங்களிப்பினை அங்கீகரித்து, பிரதான பங்குதாரர்கள் மற்றும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக SDD பொலிமருடன் நீண்டகால பணியாற்றும் அணி உறுப்பினர்களான திருமதி.சதுரிகா மற்றும் திருமதி.சங்கீதிகா ஆகியோர் அவர்களது விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பிற்காக கௌரவிக்கப்பட்டனர்.

தனது முடிவுறையில், Founder/Managing Director திரு.ஜெயசீலன் கம்பெனியின் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். “இவ்விருபதாம் வருட மைற்கல்லானது எம்முடைய ஒட்டுமொத்த அணியினதும் எமது நம்பிக்கைமிகு பங்காளர்களினதும் கடின உழைப்பு, போராட்டகுணம் மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றிற்கான சான்றொன்றாகும். நாம் ஒன்றாக சில குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளதுடன், பொலிமர் துறைக்கான எல்லைகளை விஸ்தரிப்பதிலும், புதுமை செய்வதிலும் மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்குவதிலும் நாம் தொடரவிருக்கின்ற எதிர்காலம் குறித்து நான் ஆர்வமாகவிருக்கின்றேன்” என்பதனை வெளிப்படுத்தினார்.

தொடரவிருக்கும் சவால் நிறைந்த வருடங்களினை கருத்திற் கொண்டு பயணத்தினைப் பிரதிபலிப்பதற்கு விருந்தினர்களுக்கு வாய்ப்பளித்து, அம்மாலையானது பகலுணவுடன் நிறைவுபெற்றது. SDD பொலிமரானது தனது வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தினை தொடங்கியுள்ள நிலையில் அதிசிறப்பானவற்றை முற்கொண்டுசெல்வதற்கும் பொலிமர் துறையில் முன்னணி வகிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் காணப்படும்.

 

 

 

 

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd