SDB வங்கியானது அதன் பெருநிறுவன முகாமைத்துவஅணியின் Deputy General Manager/Chief Business Officerஆக திரு. சிட்ரல் டி சில்வா அவர்களின் நியமனத்தினைஅறிவிப்பதில் பெருமிதமடைகின்றது. வங்கியியல் துறையில்நான்கு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட தனித்துவமான தொழில்அனுபவத்துடன், திரு. டி சில்வா அவர்கள் நிலைமாறுவளர்ச்சியினை முன்னெடுப்பதில் அனுபவ செல்வத்தினையும்நிருபிக்கப்பட்ட சாதனைகளையும் ஒருங்கே கொணர்கின்றார்.
திரு. டி சில்வா அவர்களது புகழ்மிக்க தொழிற்பயணமானதுஅவர் வங்கியியல் செயற்பாடுகளில் தன்னுடைய திறன்களைதீட்டிக்கொண்ட, டொய்சு வங்கியிலிருந்து ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் நிறுவனத்தின் வெற்றிக்காக அதிமுக்கியபங்குவகித்த, செலான் வங்கியில் சிரேஷ்ட தலைமைத்துவபாகத்தினை வகித்தார். கிளை வங்கியியல் செயற்பாடுகள், அபிவிருத்தி வங்கியியல், மீளப்பெறல்கள், பணவலுப்பல்மற்றும் மூலோபாய வியாபார பெறுபேறுகளை விநியோகித்தல்என்பன அவரது நிபுணத்துவமிக்கப் பகுதிகளைஉள்ளடக்குகின்றன. மரபார்ந்த வங்கியியலிற்கு அப்பால், திரு. டி சில்வா அவர்கள் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும்வாடிக்கையாளர் மைய தீர்வுகளில் கவனம்செலுத்தும், சிலிக்கன் வெளியை மையமாகக் கொண்ட தகவல் தொழிநுட்பகம்பெனியான இமோஜிட் உடன் வியாபார அபிவிருத்திக்கானஅவரது ஆலோசனை வழங்கலின் ஊடாக தன்னுடையதகவமைத்துக்கொள்ளல் மற்றும் புத்தாக்க சிந்தனையையும்வெளிப்படுத்தியிருந்தார்.
அவரது தொழிற்பயணத்தின் முழுமையிலும், திரு. டி சில்வாஅவர்கள் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தல், இலாபத்தினை வளப்படுத்தல், மற்றும் மூலோபாயபுத்தாக்கங்களை துணிவுடன் முன்னெடுத்தல் என்பவற்றைஉள்ளடக்கி தொடர்ச்சியாக அதிசிறப்பான பெறுபேறுகளினைவெளிப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளைஅமுல்படுத்தல், செயற்பாட்டு வினைத்திறனை முறைப்படுத்தல், மற்றும் பலமான வாடிக்கையாளர் ஈடுபாட்டினைவளர்த்தல்களிலான அவரது அனுபவமானது SDB வங்கிக்கானஒரு பெறுமதிமிக்க சொத்தாக அவரை நிலைப்படுத்துகின்றது.
SDB வங்கியானது புத்தாக்க நிதிசார் தீர்வுகளின் ஊடாகசமுதாயங்களை வலுப்படுத்தும் தனது நோக்கத்தினில்தொடர்ந்தும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. பெருநிறுவன முகாமைத்துவ அணியிலான திரு. டி சில்வாஅவர்களது இணைவானது அதனது தலைமைத்துவத்தினைவலுப்படுத்துவதிலும் அதனது பங்குதாரர்களிற்கு இணையற்றபெறுதியினை வழங்குவதிலுமான வங்கியின் அர்ப்பணிப்பினைவெளிப்படுத்துகின்றது.
SDB வங்கி குறித்து:
வாடிக்கையாளர் மைய மற்றும் பொருத்தமான ஆதரவினைவழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒவ்வொருதனிநபரினதும் தேவைகளுக்காகபிரத்தியேகமாக்கப்பட்டதுமான, எதிர்காலத்திற்கு தயாரனாவங்கியொன்றாக, SDB வங்கியானது இலங்கை மத்தியவங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அனுமதிப்பெற்றவிசேடத்துவப்பட்ட வங்கியொன்றாவதுடன் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான சபை மற்றும் பிட்ச் ரேட்டிங் BB+ (lka) உடன் பட்டியலிடப்பட்டதாகவும் காணப்படுகின்றது. நாடளாவியரீதியிலான 94 கிளைகளின் வலையமைப்புடன், நாடு முழுவதுமான அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சியாளர்கள், பெருநிறுவனங்கள், மற்றும்வியாபார வங்கியியல் வாடிக்கையாளர்களிற்கு நிதிசால்சேவைகளின் பொருத்தமான அளவுகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகள் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள்மற்றும் வியாபாரத்தினை முன்னேற்றுவதில் நிலையானகவனத்தினைச் செலுத்துவதுடன், சுற்றுச்சூழல், சமூக மற்றும்ஆட்சி கோட்பாடுகள் என்பன வங்கியின் விழுமியங்களில்ஆழமாக உள்வாங்கப்பட்டுள்ளன. வங்கியானது இலங்கையைபுதிய உச்சங்களை நோக்கி இட்டுச்செல்வதினைநோக்கமாகக்கொண்டு, பெண்களை வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களது நிலைபேறானஅபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பு என்பனவற்றைமுன்னிலைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புமிக்கதாககாணப்படுகின்றது.