web log free
September 13, 2025

தேங்காய், கோப்பி, மாம்பழ பெறுமதி சங்கிலியை வலுப்படுத்த பங்குடைமையாளராகும் SDB வங்கி - அவுஸ்திரேலிய சந்தை அபிவிருத்தி வசதிகள்

SDB வங்கியானது, வியாபார அபிவிருத்தியின் ஊடாக தேசிய அபிவிருத்தியை முன்னேற்றுவதிலான அதனது தொடர்ச்சியான கவனத்துடன், அதனது தற்போதைய பெறுமதி சங்கிலி நிதியிடல் முயற்சிகளினை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவி வழங்கும் சந்தை அபிவிருத்தி வசதியுடன் (MDF) சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இம்மூலோபய பங்குடைமையானது தங்களது பெறுமதி சங்கிலிகளின் ஊடேயான சிக்கலான நிதியிடல் மற்றும் அபிவிருத்தி இடைவெளிகளை தீர்ப்பதன் வாயிலாக தென்னை, கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளை உயர்த்துவதில் கவனம் செலுத்துகின்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/பிரதமநிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன மற்றும் MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மியம் பிராச்சா உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட தலைவர்களது முன்னிலையில் இடம்பெற்றது.

 இப்பகுடைமை குறித்து கருத்துரைக்கையில், SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், 'இலங்கையின் அபிவிருத்தி மற்றும் செழுமையை நோக்கி பங்களிக்கும் தெளிவானநோக்குடனான வங்கியாக, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரவளிப்பதற்கான பொறுப்பு மற்றும் வாய்ப்பு என இரண்டாகவும் நாம் இதனைப் பார்க்கின்றோம். விவசாயமானது பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்குவதுடன்  எமது பெறுமதி சங்கிலி நிதி வழங்கல் நிகழ்ச்சித்திட்டமானது ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் வலுப்படுத்துவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது - மூலதனமிடல் ஊடாக மாத்திரமின்றி இத்தகைய பங்குடைமைகளின் ஊடாகவும். MDF உடனான இக்கூட்டிணைவானது அடிமட்டத்தில் பொருளார்ந்த பெறுபேறினை வழங்கும் என்பதுடன் தேசிய பொருளாதாரத்திற்கும் நேர்க்கணியமாக பங்களிக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.' என்றார்.  

இக்கூட்டுடைமையின் வாயிலாக, SDB வங்கி மற்றும் MDF என்பன துறைசார் பங்குதாரர்களுக்கு கூட்டு-முதலீட்டு வாய்ப்புக்களையும், உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்ப்பினை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை விரிவாக்கவும், சந்தை உள்ளிடல் மற்றும் எழுச்சியுற்றுவரும் வியாபாரங்களுக்காக உற்பத்தி பரிசோதனைகளை வளப்படுத்தவும், பரந்த வர்த்தக வலையமைப்புக்களுக்கு உற்பத்தியாளர்களை இணைப்பதன் வாயிலாக சந்தை நுண்ணறிவை வழங்குவதற்காகவும் நெருக்கமாக பணியாற்றவுள்ளன. இத்தகைய அணுகுமுறையானது சிறுவுடைமை பண்ணையாளர்கள்,செயன்முறைப்படுத்துநர்கள், மற்றும் விவசாய சுயதொழில்வாண்மையாளர்கள் என்போரை வலுப்படுத்தவும் அதேவேளை  துறைசார் நெகிழ்வுடைமை மற்றும் போட்டித்தன்மையை வளப்படுத்தவும் நோக்கங்கொண்டுள்ளது.

 MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி. மரியம்பிராச்சா அவர்கள் ' உலகளவில் உயருகின்ற கேள்விகளுடன்இலங்கையின் விசேட பண்டங்களான கோப்பி, மாம்பழம் மற்றும் தேங்காய் என்பன வளர்ச்சியில் சிறப்பான ஸ்தானத்தில் காணப்படுகின்றன. மூலோபாய முதலீடு மற்றும் வலுவான உள்ளுர் பங்குடைமைகளால் இத்துறைகளை உயர்பெறுமதியுடைய ஏற்றுமதி நகர்த்துகைகளுக்கு மாற்றவும்வியாபாரத்திற்கான உண்மை வருமானத்தையும் மற்றும் சமுதாயத்திற்கான நன்மைகளையும் உருவாக்க முடியும். SDB வங்கியுடனான இப்பங்குடைமையானது இலங்கையின் விவசாயத் துறையானது வலுவான உயரங்களை அடைவதனை பார்ப்பதற்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையினை உறுதிப்படுத்தும் என MDF நம்புகின்றது.

பெறுமதி சங்கிலியானது உற்பத்தியின் முழுமையான பயணத்தைபயிரிடல் மற்றும் அறுவடை முதல் செயன்முறைப்படுத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் வரைபிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இலங்கையின் விவசாயத் துறையில் இச்சங்கிலி ஊடான பல செயற்பாட்டாளர்கள் மூலதனம், நிபுணத்துவம் மற்றும் சந்தை நெறிப்பாதைக்கான அணுகலில் நோக்கங்கொண்டுள்ளனர். இப்பெறுமதி சங்கிலி நிதி வழங்கல் துவக்கத்தின் ஊடாகSDB வங்கியானது இவ்விடைவெளிகளை நிரப்பவும் மிகவும்உள்ளடக்கமான கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக நிலைபேண் வளர்ச்சியை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளது.

MDF நிறுவனமானது, தேங்காய் கோப்பி மற்றும் மாம்பழத் துறைகளில் முக்கிய பங்குடைமையாளர்களுடன் ஏலவேவ லுவான உறவுகளை கட்டமைத்துள்ளதுடன்இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலான முதல் தடைவையாக இலங்கையில் வங்கித்துறை பங்காளருடன் ஈடுபட்டுள்ளமையானது சந்தை அபிவிருத்தி முயற்சிகளுடன் நிதிசார் தீர்வுகளை ஒருங்கிணைப்பதனை நோக்கிய முக்கியதொரு முன்னெடுப்பினையும் குறிக்கின்றது.

இந்நிகழ்ச்சித்திட்டத்தில் வினைத்திறனுடன் ஈடுபடவும் தேசத்திற்காக மிகவும் நெகிழ்வுடையதும் உள்ளடக்கமானதுமான விவசாய பொருளாதாரத்தினை கட்டமைக்க பங்களிக்கவும் தொடர்புடைய அனைத்து அரசாங்க முகவரகங்கள், அபிவிருத்தி பங்குதாரர்கள் மற்றும் தனியார் பங்குடைமையாளர்களையும் ஊக்குவிக்கின்றது.

SDB வங்கி:

வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனி நபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச்ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவிய ரீதியில் 94 கிளைகளின்  வலையமைப்பினூடாக, வங்கியானது நாடு முழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமான வகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பட விளக்கம்

இடமிருந்து வலம்: ஹிருணி லியனாராச்சி> வியாபாரஆலோசகர் - MDF; விஷான் ராஜகருணா> வியாபாரஆலோசகர் - MDF; தேசான் விக்கிரமசிங்கே> இலங்கைஅணி ஒருங்கிணைப்பாளர் - MDF; காஞ்சனாஹிரிமுதுகொட> முகாமையாளர் - VCF மற்றும் விவசாயசுயதொழில்வாண்மை அபிவிருத்திSDB வங்கி; கபிலஆரியரத்ன> SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி; சிதரல் டி சில்வா> சிரேஸ்ட வங்கிஅதிகாரி SDB வங்கி; ஹேமல் கீகனகே> வியாபர வங்கிமற்றும் SME தலைவர்... - SDB வங்கி; பினேஷ் அரவிந்த கிளைவங்கியியல் தலைவர் - SDB வங்கி; தரங்க டி சில்வா> சிரேஸ்டமுகாமையாளர் - SDB வங்கி; மாலிக் ஷெரிப்புத்தின்> பிரதிஇலங்கைக்கான பணிப்பாளர் - MDF;

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd