தனியார் மயமாக்கல் உரிமை கோரலுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக, வதந்திகளை நிராகரிக்கின்றது. மக்கள் வங்கிய அத்தகைய வதந்திகள் அனைத்தையும் ஆதாரமற்றது மற்றும் வங்கியின் சட்ட திருத்தத்தில் முன்மொழியப்பட்டவற்றுக்கு முரணானது என்றும் கண்டனம் செய்கிறது.
மக்கள் வங்கியின் தலைவர் திரு.நிஸ்ஸங்க நாணயக்கார, பிசி கருத்து தெரிவிக்கையில், “ஜூலை 9ஆம் 2018, பாராளுமன்றத்துக்கு வெ ளியிடப்பட்ட மக்கள் வங்கியின் சட்ட திருத்த மசோதாவின் நோக்கம் இரண்டாகும். ஒன்று அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரிக்க 12ஆவது பிரிவுக்காக முன்மொழியப்பட்ட மறுசீவமைப்பின் மூலம் வங்கி மூலதனத் தூண்டுதலுடன் செலுத்தப்பட்ட பிற ஏற்பாடுகளின் பின்னணியில் சிந்திக்கப்படுகின்றது.
இது இலங்கை அரசாங்கத்தினால் ஊடுக்கமளிக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். மற்றையது, 20,21 மற்றும் 43ஆம் பிரிவின் திருத்தங்கள் வங்கிய வளர்ச்சியை மேலும் இலகுபடுத்துவதற்கு, ஒழுங்கு முறைப்படுத்தல் நோக்கங்களுக்காக கடன் பத்திரங்களை வழங்குவதாகும். இது ஏனைய அரச வங்கிகளின் செயற்பாடுகளுடன் ஒத்ததாகும்.
அவர் தொடர்கையில், “இந்த சூழலில், 1961ஆம் ஆண்டின் மக்கள் வங்கி சட்டம் 29ஆம் பிரிவு 13இன் படிப வங்கியின் ஒரெ உரிமை இலங்கை அரசாங்கம்எ னப்து குறிப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எழுகின்ற சந்த சந்தேகத்தையும் தவிர்ப்பதற்காக, முன்மொழியப்பட்ட திருத்தங்களுள் இந்த பிரிவு 13 உள்ளடக்கப்படவில்லை.
அவ்வாறு திருத்தம் செய்யப்படாவிட்டால், இலங்கை அரசாங்கம் தவிர்ந்த ஏனைய எந்த ஒரு பிரிவினருக்கும் பங்கு வழங்குதல் தொடர்பான வதந்திகள் ஆதாரமற்றது என்று சொல்ல தேவையில்லை. அது இன்று மட்டும் இல்லை எதிர்காலத்திலும் ஆதாரமற்றவையாக காணப்படும். வேறு விதமாக வலியுறுத்தி கூறினால். வங்கியின் வைப்பாளர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ பங்கு வழங்கல் இடம்பெறாது மேலும் கடன் பத்திரங்கள் வழங்கப்படும் போது எதுவித பங்கு பரிமாற்றல் சந்தர்ப்பங்களும் அளிக்கப்படமாட்டாது”
வங்கியின் செயல்திறன் குறித்து பேசுகையில், பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ரசித குணவர்தன தெரிவித்ததாவது. “ முதன்மையான வங்கி முறை அழுத்தங்களில், செயற்படா கடன்களின் உயர்வு மற்றுமு் வருவாய் ஈட்டல் ஆகியவற்றிலிருந்து எழும் அழுத்தம் தொழில்துரைற முழுவதும் தௌவாக தெரிகிறது. ஏனைய வங்கிகளை போன்று மக்கள் வங்கியின் மொத்த செயற்படா கடன் வீதமானது 2017ஆம் ஆண்டின் இறுதியில் 2.49% ஆகவும், 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 2.49% ஆகவும் காணப்பட்டதுடன் 2019ஆம் ஆண்டு மார்ச் 31 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.
அதாவது இவை தொழில்துறை சாராசரிகளுக்கு கீழே இருந்தன. தொழில்துறை சராசரி முறையே 2019 மாச்சி 31 இல் 4.23% ஆகவும் 2018 அமு: அண்டின் இறுதியில் 2.5% ஆகவும் இருந்தன.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கியின் ஈவுத்தொகை செலுத்தல்கள் மற்றும் தக்கவைத்த வருவாய் குறித்து திரு. ரசித குணவர்தன சுட்டிக்காட்டினார். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வங்கி முறையே மொத்தம் ரூபா 5.22 பில்லியன், ரூபா. 3.42 பில்லியன் திறைசேரிக்கு செலுத்தியது இது. வரிக்கு பின்னரான இலாபத்தின் செயற்பாட்டின் முறையே 28.6 % மற்றும் 20% ஆகும். இதன் மூலம் வங்கியின் தங்கவைக்கப்பட்ட வருவாய்களில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை சான்றுப்படுத்தப்படுகின்றது.
பின்னணியின் அடிப்படையில் மொத்த சொத்துக்கள், வைத்து தொகை மற்றும் வாடிக்கையாளரின் முற்பணம் அளவிடப்படும் வகையில் நாட்டின் இரண்டாவது பெரிய நிதிச்சேவை வழங்குனராக மக்கள் வங்கி உள்ளது. வங்கியானது நாடு முழுவதும் 737 கிளைகள்/ சேவை மையங்களைக் கொண்ட நாடு தழுவிய வலையமைப்பினால் நன்மை பெறுகின்றது.
டிசம்பர் 31, 2018 உடன் முடிவநடைந்த ஆண்டில் வங்கி ஒன்ருங்கிணைந்த அடிப்படையில் மொத்த இயக்க வருமானம் மற்றும் வரிக்கு முன்னரான இலாபம் முறையே ரூபா 31.16 பில்லின என அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர கடன் புத்தக பதிவு 23.8 % இனால் விரிவுபடுத்தப்பட்ட அதேவேளை, அதன் ஒருங்கிணைந்த வைப்புத்தளமானது 14.5% இனால் அதிகரித்துள்ளது”.