web log free
April 19, 2024

Samsung Note 10 அறிமுகப்படுத்துகிறது மொபிடெல்

 நவீன தொழில்நுட்பம்  மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மொபிடெல், தற்போது தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த Samsung Galaxy Note 10 மற்றும் 10+ இணை தமதாக்கிக்  கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. எப்பொழுதும் நவீன handsets இணை அறிமுகப்படுத்துவதில் முதலிடம் வகித்திடும் மொபிடெல், அடுத்த தலைமுறைக்கான Galaxy Note 10 மற்றும் 10+ இணை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்னுமொரு மைல்கல்லினை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

புரட்சிகரமான S Pen  மற்றும் Zoom-In mic, Video Bokeh போன்ற புதிய கமரா அம்சங்களுடன் 4,300mAh வரையிலான  intelligent battery இணையும் கொண்டுள்ளதால் Galaxy Note 10 மற்றும் 10+ அடுத்த நிலைக்கான சக்தியைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களாகக் கருதப்படுகின்றன.

இந்த தொலைபேசிகளை கொள்வனவு செய்திடும் ஒவ்வொரு முறையும் மொபிடெல் மாதாந்தம் 4GB என்ற அடிப்படையில் 12 மாதங்களுக்கு இலவச டேடாவினை வழங்க முன் வந்துள்ளது. இச்சலுகை  வாடிக்கையாளர்களுக்கு தவிர்க்கமுடியாததொன்றாக உருவாக்கியுள்ளதுடன் இப்புதிய அழகிய தோற்றத்தினைக் கொண்ட Samsung smartphones இணை கொள்வனவு செய்வதற்கு மொபிடெலினை சிறந்த தெரிவாகவும் மாற்றியுள்ளது. ரூ. 182,990 இலிருந்து ஆரம்பமாகும்  விலையில் Galaxy Note 10 மற்றும்  10+  ஆனவை தெரிவு செய்யப்பட்ட மொபிடெல் விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றன.

அடுத்த நிலைக்கான கமரா, நேர்த்தியான மற்றும் மெல்லிய வடிவமைப்பு, கவர்ச்சிகரமான டிஸ்ப்ளே, செயற்திறன் மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட கருவிகள் உடனான Galaxy Note10 மற்றும் Galaxy Note10+ ஆகியவை பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தினை வழங்குகிறது. இலங்கையில் முதன் முறையாக பல்வேறுபட்ட அளவுகளில் மற்றும் இரண்டு பிரிஸ்மடிக் சாயல்களில் Note familyக்கு புதிதாய் இணைந்திடுவதுடன் உங்கள் தேவைக்கும் மற்றும் ஸ்டைலுக்கும் ஏற்ற கச்சிதமான தொலைபேசியினை இலகுவாக தெரிவு செய்திட உதவுகிறது.

மேலும், Galaxy Note10+ஆனது கவர்ச்சிகரமான மெல்லிய வடிவமைப்புடன் இற்றைவரை உள்ளவற்றில் மிகப்பெரிய 17.16 செ.மீ  (6.8 அகலம்)  அளவிலான Cinematic Infinity-O டிஸ்ப்ளே உடனான Note டிஸ்ப்ளேயினை  சிறப்பம்சமாகக் கொண்டுள்ளது.

Galaxy Note10 ஆனது 15.94 செ.மீ  (6.3 அகலம்) அளவிலான Cinematic Infinity-O டிஸ்ப்ளேயினைக் கொண்டுள்ளதால் S Pen இன் சக்தியினையும் மற்றும் உச்ச உற்பத்தித் திறனை எடுத்துச்செல்லும் வசதியினையும் விரும்பிடும் பாவனையாளர்களுக்கு மிகவும் ஏற்றது ஆகும்.

இலங்கையில் Galaxy Note10+ ஆனது 12GB RAM+256GB மற்றும் 12GB RAM + 512GB போன்ற வேறுபட்ட வகைகளில் கிடைக்கப்பெறும். Micro SD card உடன் மேலதிகமாக 1TB storage (சேமிப்பகத்தை) இணை சேர்த்துக்கொள்ளவும் முடியும்.

அதே போல் Galaxy Note10 ஆனது 8GB RAM + 256GB வகையில் கிடைக்கப்பெறும். இவ்விரு சாதனங்களும் இரண்டு கண்கவரும் வர்ணங்களில் கிடைக்கப்பெறும். Galaxy Note 10+ ஆனது Aura Glow மற்றும்  Aura Black ஆகிய வர்ணங்களிலும் Galaxy Note 10  ஆனது Aura Glow மற்றும் Aura Black ஆகிய வர்ணங்களிலும் கிடைக்கப்பெறும்.

Last modified on Monday, 09 September 2019 15:04