web log free
April 25, 2024

RENO 2f போனை அறிமுகம் செய்கிறது OPPO

பயனர்களின் படைப்பாற்றலின் வரம்புகளை மீள்வரையறை செய்வதாக உறுதியளித்துள்ள OPPO, தனது RENO 2f (ரெனோ 2f) மொபைல் போனை இம்மாதம் இலங்கை சந்தையில் வெளியிடவுள்ளது.

RENO 2f ஆனது 48MP குவாட் கெமரா தொகுதி, மனித கண்களுக்கு கூட அறிய முடியாத விபரங்களை எடுக்கும் மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டு வரவுள்ளது.

ரெனோ என்பது எவ்வாறானது?
OPPO ரெனோவின் பிறப்பு, 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், முதலாவது ரெனோ தொடரின் வெளியீட்டை அடுத்து இடம்பெற்றது. இது இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தமக்குள் இருக்கும் துடிப்பைப் பகிரவும் விரும்புகின்ற இளைஞர்களுக்காகவென, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட OPPO ரெனோ சீரிஸ் அதன் ஸ்டைலான தோற்றம் மற்றும் புதுமையான வடிவமைப்பு காரணமாக, அதன் பயனர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு பயனருக்கும் அவரவருக்கு ஏற்றவகையிலான வித்தியாசமானதாக ரெனோ அமைவதாக OPPO நம்புகிறது. அதாவது, அசல் OPPO ரெனோ சீரிஸானது, பயனர்கள் விரும்பியவாறு செலுத்தும் சுதந்திரமான கடிவாளத்தைக் வழங்கி, படைப்பாற்றலுக்கான தடைகளை தகர்த்து அவர்களுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது. ரெனோ வரையறைகளை மீறி, ஒவ்வொரு பயனரும் அவர்களுக்கான தனித்துவமான ரெனோ அனுபவத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றது. ரெனோவின் திறனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், OPPO ஆனது உலகெங்கிலும் உள்ள கலைஞர்களுடன் இணைந்து ரெனோ நெறிமுறைகளை இயக்குகின்ற, விளையாட்டு, கற்பனை உணர்வு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. எதிர்வரும் பத்து ஆண்டுகளில் OPPO இன் ஸ்மார்ட்போன் மற்றும் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கான ஊக்கியாக ரெனோ சீரிஸ் அமையும் எனும் நோக்கிலேயே அது வெளியிடப்பட்டது. விரைவில் வெளியிடப்படவுள்ள OPPO ரெனோ 2 சீரிஸ் இந்த படைப்பாற்றலை ஒரு படி மேலே கொண்டு செல்லும். பயனர்களுக்கு சவாலாக அமைந்துள்ள எப்போதும் போன்ற புகைப்படம் எடுத்தல் நுட்பங்களை புறந்தள்ளி, புதிய சிந்தனையைத் தூண்டி, கெமரா பயன்பாடுகளுக்கு துணை நிற்கும்.

முன்னணி தொழில்நுட்பத்துடன் பயனர்களின் படைப்பாற்றலை வெளியிடும்
OPPO என்பது மொபைல்போன் புகைப்படப்பிடிப்பு எல்லைகளைத் தகர்த்து, சாதனத்தின் புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களுக்குள் எப்போதும் போன்ற கண்ணோட்டங்களை நீக்கி, புதிய கோணங்களுக்கும், சாத்தியங்களுக்கும் அவர்களது எண்ணங்களை நோக்கி கொண்டு செல்லும் என்பதோடு, பரந்த பிரதேசங்கள் முதல் நெரிசலான நகர வீதிகள் வரை அல்லது பிரகாசிக்கும் கடற்கரை முதல் இருண்ட நிலவில்லாத இரவுகள் வரை, அது இடம் அல்லது நேரம் போன்ற காரணங்களால் தடைகளுக்குட்படாது.