web log free
April 18, 2024

CDBஇன் சிசுதிரி புலமைப்பரிசில் வென்றோர்

பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) வருடாந்தம் முன்னெடுக்கும் தனது சிசுதிரி புலமைப்பரிசில் திட்டத்தை, இந்த ஆண்டும் பன்னிரண்டாவது தடவையாக கொழும்பு BMICH இல் நவம்பர் 4 ஆம் திகதி முன்னெடுத்திருந்தது.

இலங்கையில் இயங்கும் சமூகப் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களுக்கு நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் பெருமளவு முக்கியத்துவத்தை CDB வழங்கிய வண்ணமுள்ளது. CDB இனால் நிதி வழங்கப்படும் கட்டமைப்பாக சிசுதிரி அமைந்துள்ளதுடன், இளம் கனவுகளுக்கு வலுவூட்டி தேசத்தில் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உறுதியான கல்வி பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.

 2008 ஆம் ஆண்டு முதல் CDB சிசுதிரி ஊடாக மொத்தமாக 609 புலமைப்பரிசில்கள் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனூடாக, அவர்களின் கல்வி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மொத்தமாக 22.9 மில்லியன் ரூபாயை பங்களிப்பு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக தமது கல்விக் கனவுகளை தொடர முடியாத சிறுவர்களை கவனத்தில் கொண்டு, CDB இனால் குறைந்த வசதிகள் படைத்த குடும்பங்களைச் சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 2018 ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 100 மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.

தரம் 5 புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கு 50000 ரூபாய் பெறுமதியான நிதிக் கொடுப்பனவு ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படும். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு வருடாந்தம் 15000 வீதம், உயர் தரத்தை பூர்த்தி செய்யும் வரை வழங்கப்படும். CDB ரன்கெட்டி சேமிப்பு கணக்கு வைத்திருக்காதவர்களுக்கும் இந்த புலமைப்பரிசிலுக்கு தகைமை பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.