web log free
April 23, 2024

Hondaவின் ஊடாக தினசரி ரூ.100,000 வெல்லுங்கள்

Honda  நிறுவனம் புது வருடத்தை நம்பமுடியாத வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டங்களுடன் ஆரம்பித்துள்ளது. இதன்படி,  Honda இருசக்கர வாகனங்களை Stafford Motors இடமிருந்து அல்லது நாடுபூராகவும் உள்ள அதன் அதிகாரம் பெற்ற விற்பனை முகவர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், ' Honda  தவசே லக்சபதி ' என்ற வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக நாளாந்தம் இடம்பெறும் குலுக்கல் ஊடாக பணப் பரிசினை வெல்லவுள்ளனர். 

அந்தந்த தினத்தில் மாத்திரம் இரு சக்கர வாகங்களை கொள்வனவு செய்பவர்கள் மட்டுமே அந்த நாளுக்கான குலுக்கலில் உள்வாங்கப்படுவதால், பரிசுகளை வெல்லும் வாய்ப்பு மற்றைய ஊக்குவிப்புத் திட்டங்களை விட மிக அதிகமாகும். தினசரி ஒவ்வொறு வெற்றியாளரும் ரூபாய். 100,000/- பணப்பரிசிலை பெறவுள்ளனர்.

இந்த குலுக்கலில் பங்குபெற, வாடிக்கையாளர்கள் தாம் இரு சக்கர வாகனத்தைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் கூப்பனை நிரப்பி, 0117672735 / 0117634735 இற்கு அன்றைய தினமே தொலைநகலில் அனுப்ப வேண்டும் அல்லது தெளிவாக படம்பிடித்து This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்ப முடியும் . 

இந்த நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டமானது 2020  ஜனவரி 16 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முதல் குலுக்கல் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன், 50 நாட்களுக்கு நாளாந்தம் ( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறைகள் தவிர்த்து)  மார்ச் 31 ஆம் திகதி வரை 50 குலுக்கல்கள் இடம்பெறவுள்ளன. 

வார இறுதியில் அல்லது விடுமுறையில் பெறப்பட்ட கூப்பன்கள் அடுத்த நாள் நடைபெறும் குலுக்கலில் சேர்க்கப்படும்.தினசரி குலுக்கல் Honda Sri Lankaவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படுவதுடன், வெற்றியாளர்கள் தினமும் பல வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிகள், பத்திரிக்கைகள் மூலமாகவும் அறிவிக்கப்படுவார்கள்.

Stafford Motor (Pvt) Ltd இன் Director/ COO சாரக பெரேரா, இந்த ஊக்குவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையில்," Honda வர்த்தகம நாமத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கைமாறாக ' Honda தவசே லக்சபதி ' ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

மேலும், தற்போதைய பொருளாதார நிலைமைகள் காரணமாக, இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான ஆரம்ப கட்டணத்தை செலுத்துவது பெரும்பாலானவர்களுக்கு கடினமானதாகும். லீசிங்  வசதி மூலம் Honda  இருசக்கர வாகனமொன்றை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளரொருவர் ஆரம்பக் கட்டணமாக செலுத்தும் தொகையை விட அதிக தொகையை இதன் மூலம் வெல்லும் வாய்ப்புள்ளது. 

தினசரி விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது வெற்றிபெறும் வாய்ப்பு மிக அதிகமான ஊக்குவிப்புத்திட்டம் 'Honda தவசே லக்சபதி’ ஆகும்,” என்றார்.

1977 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Stafford Motors நாட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றென்பதுடன், கடந்த 42 வருடங்களாக  மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகின்றது. 

அவர்களது மோட்டார் சைக்கிள் தயாரிப்பு வரிசையானது CB Hornet, CB160X, CB Shine மற்றும் CD Dream ஆகியனவற்றையும், அவர்களது ஸ்கூட்டர் வரிசையானது Grazia, Activa-I மற்றும் Dio ஆகியவற்றை உள்ளடக்கியதுடன், இவையே இலங்கையில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களாகும்.