ஹட்டன் நெஷனல் வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்த கிளை எதிர்வரும் 14 நாட்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது என்று ஹட்டன் நெஷனல் வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், அவர் தங்கியிருந்த, தொடர்புகளை கொண்டிருந்த நபர்கள் தொடர்பிலான விவரங்களை பாதுகாப்பு தரப்பினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், அந்த ஊழியரின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
அதுமட்டுமன்றி, ஹட்டன் நெஷனல் வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளையில் பணியாற்றும் ஊழியர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.