web log free
April 19, 2024

“மரம் ஒன்றை இன்று நாட்டுவோம்”

2020 ஜுன் மாதம் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடு முகமாக  மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“உயிர்ப்பல்வகைமை – இயற்கைக்கொரு வாய்ப்பு” எனும் தொனிப்பொருளின் ஊடாக சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சினால் இத்தடவை உலக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையானதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்குகின்றது. 

இதற்கிணங்க மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மரநடுகைக் கருத்திட்டங்கள், நாடளாவிய பாடலாக்க மற்றும் புகைப்படப் போட்டி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கொவிட் - 19 தொற்றுநோய்க் காலப்பகுதிக்குள் கொழும்பு நகரத்தின் சுற்றாடல் இயல்பை வெளிக்காட்டுகின்ற ஒளிநாடாவொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

உலக சுற்றாடல் தினத்தின் நிமித்தம் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சு தனதுஅமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் கூட்டாக இலங்கையிள் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கத்தக்கதாக மரநடுகைக் கருத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதோடு இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்துக்கம் தனித்துவமான பழமரக் கன்றுகள் பிரதேசத்தின் மதவழிபாட்டு நிலையங்களில் நடுகைசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்போது கேகாலை, மாத்தறை, பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களினதும் மரநடுகைக் கருத்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கிணங்க இந்த மாவட்டங்களில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதவழிபாட்டு நிலையங்களில் உலக சுற்றாடல் தினத்தன்று இந்த பழமரக் கன்றுகளை நடுகைசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Last modified on Friday, 05 June 2020 07:32