web log free
June 24, 2026

இடமாறியது பதவிய கிளை

செலான் வங்கி சமீபத்தில் தனது பதவிய கிளையை, புதிய அலுவலக வளாகத்துக்கு இடம்மாற்றியிருந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை வழங்கல்களை வலுப்படுத்தும் ஒரு மய்ய இடமாக, அமைந்திருக்கிறது.  

மிகவும் விரிவான வங்கி அனுபவத்தை வழங்கும் இக்கிளை, செலான் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் - கிளைகள், சித்ரால் டி சில்வாவால் திறந்துவைக்கப்பட்டது.

இக்கிளை 387- A, பண்டாரநாயக்க மாவத்தை, பதவிய, பராக்ரமபுர, அனுராதபுரம் எனும் முகவரியில் அமைந்துள்ளது. வார நாள்களில் காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை இக்கிளை திறந்திருக்கும்.    

Last modified on Friday, 14 August 2020 01:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd