web log free
March 28, 2024

போட்டிக்கு அழைக்கிறது கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியில் நாட்டின் மற்றொரு சாதனை நிகழ்வை முன்னிறுத்தியுள்ளது. இந்த செயற்திட்டம் சமீபத்தில் ' Envision the Future’ எனப்படும் ஒரு கடற்கரை சிற்ப போட்டி மற்றும் வளர்ந்து வரும் உள்நாட்டு வடிவமைப்பாளர்களை இலக்காகக் கொண்ட ஒரு அர்த்தபூர்வமான கருத்தியல் வெளிப்பாட்டு சுவரை வடிவமைக்கும் ஒரு சிற்ப வடிவமைப்பு போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சாதனை அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டமான கொழும்பு துறைமுக நகரத்தை அலங்கரிக்கும் சின்னமான சிற்பங்களும், இந்த வகையில் முதன்முதலான கருத்தியல் வெளிப்பாட்டுச் சுவரும் உலகளவில் அடையாளம் காணப்படும் உள்நாட்டு நினைவுச்சின்னங்களாக மாற உள்ளன.

இந்த வடிவமைப்பு போட்டி கொழும்பு துறைமுக நகர திறப்பு விழா சார்ந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக காணப்படுவதுடன், மேலும் இந்த திட்டம் உலகளவில் அடையாளம் காணப்படும்போது ஊக்குவிப்பு உதாரணங்களாக செயல்படும் பல மூலோபாய நினைவுச்சின்னங்கள் மூலம் இலங்கையின் உற்சாக உணர்வை வசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கான கடற்கரை மற்றும் பூங்காக்கள் என செயற்திட்டத்தின் பல கட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிற்பங்கள் மற்றும் கருத்தியல் வெளிப்பாட்டு சுவர் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருக்கும். கொவிட்19 'புதிய இயல்பு வாழ்க்கை' சுகாதார  நடைமுறைகளுக்கு அமைவாக, ஒட்டுமொத்த போட்டியும் www.envisionthefuture.lk என்ற டிஜிட்டல் தளமேடை வழியாக நடத்தப்படும்

போட்டியில் வடிவமைப்பு கருத்தாக்கங்களை வழிநடத்த Academy of Design உம், ARTRA சஞ்சிகை உத்தியோகபூர்வ ART பங்காளராகவும் இணைந்துள்ளதுடன், இந்த நினைவுச்சின்ன செயற்திட்டத்தின் வடிவமைப்பில் பங்களிக்க தனது பங்குதாரர்களான அடுத்த தலைமுறையினரை கொழும்பு துறைமுக நகரம் அழைக்கிறது. சிற்ப வடிவமைப்பு மற்றும் கருத்தியல் வெளிப்பாட்டு சுவர் போட்டியில் தற்போது நாட்டில் அல்லது வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து, கலை, கட்டடக்கலை, வடிவமைப்பு, பொறியியல் மற்றும் ஃ அல்லது வேறு ஏதேனும் கற்கைநெறியில் பட்டப்படிப்பை அல்லது முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அல்லது ஆக்கபூர்வ படைப்பாற்றல் திறனுடன் ஒத்துப்போகும் வேறு எந்தவொரு கற்கைநெறியையும் முன்னெடுக்கும் எந்தவொரு இலங்கை பிரஜைகளும் பங்குபெற முடியும். 2019ஃ2020 கல்வியாண்டில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தனிநபர்கள் தனி விண்ணப்பதாரராகவும், ஒரு அணியின் உறுப்பினராகவும் (அதிகபட்சம் 2 நுழைவு சமர்ப்பிப்புகள்) விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அதிகபட்சம் 3 உறுப்பினர்களுக்கு மட்டுமே ஒரு அணியில் இடமுண்டு.

வெற்றி பெறும் கருத்தியல் படைப்புக்களுக்கு ரூபா 700,000 க்கும் அதிகமான பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன், மேலும் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் உள்ள Marina District Beach கடற்கரை நிர்மாணிப்பிற்கு தெரிவு செய்யப்படும். ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் தனிநபரும் ஃ அணியும் சிற்பத்தை உருவாக்க ஒரு சர்வதேச கட்டுமான நிறுவனத்துடன் ஒத்துழைத்து பணியாற்றுவதற்கு CHEC Port City Colombo (Pvt) Limited நிறுவனத்தால் அழைப்பு விடுக்கப்படவுள்ளனர்.

நிதி மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேச தீவு, சொகுசு கப்பல்துறை மற்றும் தீவு வாழ்விடம் ஆகிய ஐந்து வளாகங்களைக் கொண்டுள்ள கொழும்பு துறைமுக நகரம் தெற்காசியாவிற்கான உலகத் தரம் வாய்ந்த நகரமாக தோற்றம் பெற்று வருகிறது. கொழும்பு துறைமுக நகரம் கடலில் இருந்து மீளப்பெறப்பட்ட 269 ஹெக்டேயர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருவதுடன், கடந்த ஆண்டு கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதத்தில், கொழும்பு துறைமுக நகரத்தில் முதல் கிடை நிர்மாணச் செயற்திட்டத்தை உருவாக்க செயற்திட்ட நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த தலைமுறையின் எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரம் தற்போது இலங்கையில் உள்ள மிகவும் எதிர்கால நோக்குடனான செயற்திட்டமாக கருதப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான விபரங்கள் 

கொழும்பு துறைமுக நகரம் என்பது ஒரு புதிய நகர அபிவிருத்திச் செயற்திட்டம் என்பதுடன், இது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப முதலீடு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை என்பதுடன், பூர்த்தியடையும் போது அதன் மொத்த முதலீடானது 15 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 269 ஹெக்டேயர் பரப்பளவில், தற்போதைய மத்திய வர்த்தக மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட வகையில் கடலில் இருந்து நிலத்தை மீளப்பெறும் ஒரு செயற்திட்டமாக இது காணப்படுகின்றது. 

கொழும்பு துறைமுக நகரமானது நிதி மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேச தீவு, சொகுசு கப்பல்துறை மற்றும் தீவு வாழ்விடம் ஆகிய ஐந்து வளாகங்களைக் கொண்டது. 

கொழும்பு துறைமுக நகரச் செயற்திட்டம் நிறைவடையும் தறுவாயில் 5.7 மில்லியன் சதுர மீட்டர் இட வசதியைக் கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தரம் யு அலுவலகங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒரு ஒருங்கிணைந்த உல்லாச விடுதி, ஒரு சொகுசு கப்பல்துறை, சில்லறை வியாபார மையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வாழ்க்கை முறை அபிவிருத்திச் செயற்திட்டங்களைக் கொண்டிருக்கும். நவீன நிலையான நகர வடிவமைப்பு மற்றும் திறன் நகர கருப்பொருட்களைப் பயன்படுத்தி, கொழும்பு துறைமுக நகரமானது தெற்காசியாவின் மையமாகத் திகழும். 

CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்

China Harbour Engineering Company (CHEC) இன் கீழ் இயங்கி வருகின்ற CHEC Port City Colombo (Pvt) Ltd ஆனது China Communications Construction Company Limited (CCCC) இன் அங்கமாகும். 2006 ஆம் ஆண்டில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட ஊஊஊஊ ஆனது ஹொங்கொங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், 145 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தற்போது 120,000 பேருக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. துறைமுக வடிவமைப்பு மற்றும் நிர்மாணம், வீதி மற்றும் பாலங்களின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணம், தூர்வாரல் மற்றும் கொள்கலன் பாரந்தூக்கி மற்றும் கனரக இயந்திரங்களின் உற்பத்தியில் உலகளாவில் முன்னிலை வகிக்கும்

நிறுவனமாக CCCC திகழ்ந்து வருகின்றது. இதை விட, கட்டட நிர்மாணிப்பில் முன்னணி வகிக்கும் செயற்பாட்டாளராகவும், அசைவற்ற ஆதன இருப்பு முதலீடு மற்றும் நிர்மாணத்தில் பாரிய தொழிற்பாட்டாளராகவும் CCCC திகழ்ந்து வருகின்றது.

2017 டிசம்பரில் முடிவடைந்த நிதியாண்டில் 183 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த சொத்துக்களுடன், 79.4 பில்லியன் வருமானத்தை CCCC பதிவாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் Fortune 500 நிறுவனங்கள் பட்டியலில் 91 ஆவது ஸ்தானத்தை எட்டிய CCCC 2018 ஆம் ஆண்டில் ENR Top International Contractor என்ற உச்ச சர்வதேச ஒப்பந்தகாரர் பட்டியலில் 3 ஆவது ஸ்தானத்தைத் தனதாக்கியுள்ளது. உலகிலுள்ள மிகப் பாரிய கொள்கலன் இறங்குதுறைகள் மற்றும் கடலுக்கு மேலான பாலங்களை எடுத்துக் கொண்டால் 10 இற்கு 5 என்ற வீதத்தில் அவற்றை வடிவமைத்துள்ள பெருமை CCCC இனையே சாரும். 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள CCCC தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்று நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை சர்வதேச விமான நிலையம், கொழும்பு தெற்கு கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஏனைய பல பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் போன்ற பிரம்மாண்டமான செயற்திட்டங்களை நிர்மாணித்துள்ளது.

 

Last modified on Tuesday, 25 August 2020 01:43