ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐபோன் மாடல்களின் வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும் ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதமளவில்அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
ஐபோன் 13 மினி உட்பட புது ஐபோன் மாடல்கள் செப்டம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஐபோன் 13 மினி தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி ஐபோன் 12 மினி போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் புதிய கனெக்டர் பின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ஐபோன் 13 மினி ஆரம்ப விலை 699 டோலர்கள். ஐபோன் 12 மினி மாடலும் இதுபோன்ற விலையிலேயே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.