இன்றைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவரும் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதில் நாம் போடும் பதிவுகள் உலகம் முழுவதும் வேகமாக பரவும். இந்த பேஸ்புக்கை உருவாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் சக்கர்பெர்க் பற்றி இதில் பார்ப்போம்.
மார்க் சக்கர்பெர்க் மே மாதம் 14 ஆம் தேதி 1984 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே கணினி மீது ஆர்வம் இருந்து வந்தது. தனது தந்தை உதவியோடு சிறுவயதிலேயே ப்ரோக்ராமிங் எழுத ஆரம்பித்தார். இவரின் தந்தை கணினி ஆசிரியர் ஒருவரை நியமித்து அவருக்கு புரோகிராம்களை கற்றுத்தர செய்தார். மார்க் கேட்கும் கேள்விகளுக்கு அந்த கணினி ஆசிரியரால் கூட பதிலளிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு புத்தி கூர்மை உள்ளவர் மார்க் சக்கர்பெர்க்.
மார்க் சக்கர்பெர்க் கணினியில் கேம் விளையாட வேண்டிய வயதில் ஒரு game-யே தயாரித்தார். தனது 12 வயதில் Programme ஒன்றை உருவாக்கி அதற்கு Z Net Messenger என்று பெயர் வைத்தார். இதனை அவரும் அவருடைய தந்தையும் அலுவலக உரையாடலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
மார்க் சக்கர்பெர்க் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து திறமைமிக்க மாணவனாக மாறினார். அங்கு Facebook என்ற ஒரு புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தில் எல்லா மாணவர்களின் புகைப்படங்களும் விவரங்களும் இருந்தது. இதனை வைத்து FaceMash என்ற பெயரில் புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கினார். அதில் இரண்டு நபர்களின் புகைப்படங்களை வைத்து யார் சிறந்தவர்? என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு பெண்களின் புகைப்படம் தேவைப்பட்டதால் பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டை ஹேக் செய்தார்.
2004 ம் ஆண்டு The Facebook என்ற வெப்சைட்டை மார்க் சக்கர்பெர்க் ஆரம்பித்தார். இது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களிடம் பிரபலமடைந்தது.
சில மாதங்கள் கழித்து இதனுடைய வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருந்தது. இது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று நினைத்த மார்க் சக்கர்பெர்க், தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.
தனது முழு கவனத்தையும் Facebook பக்கம் திருப்பினார். 2005 ஆம் ஆண்டில் The Facebook என்ற பெயரை மாற்றி Facebook என பெயர் வைத்தார்.
2007ஆம் ஆண்டின் இறுதியில் லட்சக்கணக்கான Facebook profile கள் உருவானது.
2011 ஆம் ஆண்டில் Facebook மிகப்பெரிய வெப்சைட்டாக மாறி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.
2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் $1 பில்லியன் டாலர் கொடுத்து இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் $19.3 பில்லியன் டாலர் கொடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
பேஸ்புக்கை உருவாக்கியபோது மார்க் சக்கர்பேக்கின் வயது 19. இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இடம் உண்டு. தற்போது மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர் ஆகும்.
மார்க் சக்கர்பெர்க் 2012ஆம் ஆண்டில் பிரிசில்லா சான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
2004 ஆம் ஆண்டில் மார்க் ஸக்கர்பெர்க் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஃபேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்ததால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வென்றார்