தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் செயலிகள் ஸ்ம்பித்துள்ளமை குறித்து இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.
சில பயனர்களினால் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை வெகு சீக்கிரத்தில் சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என பேஸ்புக் நிறுவனம் நேற்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன சுமார் ஆறு மணி நேர செயலிழப்புக்கு பிறகு மீண்டும் இயல்புக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த மூன்று செயலிகளும் நேற்று இரவு செயல் இழந்தன. இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில்நுட்ப பிரச்சனையாக இது கருதப்படுகிறது.
இறுதியாக பேஸ்புக்கில், கடந்த 2019 ல் இவ்வாறான ஒரு தடங்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.