சாதாரணதரப் பரீட்சைகளில் சிறந்த சித்திகளைப் பெற்ற தெவ்மி ரன்சராவுக்கு மக்கள் வங்கியினால் மடிக்கணினி வழங்கப்பட்டது.
12th October 2021, Colombo: விசேட தேவைகள ; உள்ள மாணவியாக இம்முறை சாதாரணதரப் பரீட்சைகளுக்கு தோற்றி, அதில் 9 விசேட சித்திகளைப் பெற்ற திக்வெல்ல, ரத்மலே பம்பரென்த சத்தர்மராஜ மகா வித்தியாலயத்தின் தெவ்மி ரன்சரா ராஜபக்ஷவின் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக மடிக்கணினி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கிட மக்கள் வங்கி அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சளைக்காது உற்சாகத்துடன் மற்றும் வீரத்துடன் வாழ்க்கைக்கு முகங்கொடுத்து, சிறந்த சித்திகளைப் பெற்ற ரத்மல, குருந்துகஹஹேனவில் வசிக்கும் தெவ்மியின் உடலின் பல அங்கஙக்ள ;செயலிழந்துள்ளன. அவரது பெற்றோரே அவரைத ;தூக்கிக்கொண்டு பாடசாலைக்கு கொண்டு வந்து மீண்டும் வீட்டுககு; கொண்டு செல்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாய் இருந்திடும் இம்மாணவியின் திறமைகளை பாராட்டிடும ; வகையிலும் அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையிலும் மாத்தறை பிரதேச மக்கள ; வங்கியினால் இக்கணினி அவருக்கு கையளிக்கப்பட்டது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறப்பு சித்திகளைப் பெற்ற தெவ்மி ரன்சராவுக்கு சிறுவயது முதலே மக்கள் வங்கியின் சிசு உதான கணக்கு பேணப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் குறும்புறே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, கதிர்காம மஹாநாயக அவர்கள,; ரத்மலே பம்பரென்த சத்தர்மராஜ மகா வித்தியாலயத்தின் அதிபர் ரசிகா அபேவர்ன, மாணவியின் தந்தையான மகிந்த குலதுங்க ராஜபக்ஷ, தாயான குசுமினி அபேகுனவர்தன, மக்கள் வங்கியின் மாத்தறை பிரதேச முகாமையாளர ; ஐ.கே. இந்திக, உதவி பிரதேச முகாமையாளர ; டப்ளியு.கே.எஸ். குமாரசிங்ஹ, திவெல்ல கிளை முகாமையாளர ; டீ.ஜ.P கருனாசேன, பிரதேச வணிக மேம்பாடடு; அதிகாரி எச்.ஜீ.எஸ். தனஞ்ஜய, கிளை வணிக மேம்பாட்டு அதிகாரிகளான டப்ளியு.ப.P எ.டி. சமீர மறறு; ம் டப்ளியு.கே.பீ. லக்மினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.