மக்கள் வங்கியின் வெஸ்டர்ன் யூனியன் வெற்றிச் சீட்டிழுப்பில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
12 October 2021, Colombo: வெளிநாட்டிலிருந்து நம்நாட்டுக்கு வெஸ்டர்ன் யூனியன் ஊடாக அனுப்பப்படும் பணத்தினை மக்கள் வங ;கியில் பெற்றுக் கொள்ளும் வெற்றியாளர்களுக்கு ரூ.10,000 பெறுமதியான பரிசுப் பொதிகளை வழங்கிடும் நிகழச்சித்திட்டத்தின் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் வெற்றிச்சீட்டிழுப்பு அண்மையில் கொழும்பு -02 இல் அமைந்துள்ள மக்கள் வங்கி பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 75 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு மக்கள் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் (வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் சேவைகள்) ரொஹான் பதிரகே, பிரதி பொது முகாமையாளர்(கிளை முகாமைத்துவம்) மஹிந்த பிரேமநாத், சந்தைப்படுத்தல் அதிகாரி நாலக விஜேவர்தன மற்றும் பிரதான முகாமையாளர் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல் சேவைகள்) ரேணுகா அருணாச்சலம் உட்பட வங்கி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதே போல் வெஸ்டர்ன் யூனியன் ஊடாக வெளிநாட்டிலிருந்து நம்நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் தற்பொழுது வங்கிக் கிளைக்கு போகாமலேயே மக்கள் வங்கியின் Call and Deposit சேவை மூலமாக அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உங்கள் மக்கள் வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்யக்கூடியமை சிறப்பம்சமாகும். இதற்காக Whatsapp மற்றும் Viber மூலமாக தொடர்பு கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.