web log free
December 22, 2024

கொவிட் - 19க்கு எதிரான செயற்பாடுகளுக்கான மதிப்புமிக்க விருதினை மக்கள் வங்கி வென்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி நிதித்திட்டம் 2021 இல் கொவிட் - 19க்கு எதிரான செயற்பாடுகளுக்கான மதிப்புமிக்க விருதினை மக்கள் வங்கி வென்றது.

01 October 2021, Colombo : ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மதிப்புமிக்க ADB வர்த்தக மற்றும் விநியோக நிதித்திட்ட விருதுகள் 2021(TSCFP Awards 2021) இல் 'கொவிட் 19க்கு எதிராக மிகவும் பொறுப்புடன் செயற்பட்ட வங்கி' என்ற மதிப்பு மிக்க அங்கிகாரத்தினை மக்கள் வங்கிக்கு வழங்கியது.


TSCFP விருதுகள் ADBயின் முன்னோடி பங்குதார வங்கிகளை அங்கிகரிப்பதுடன் மேற்கூறப்பட்ட விருது ஆசியாவின் முன்னணி வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான நுழைவுப் பதிவுகளில் இருந்த தெரிவு செய்யப்பட்ட முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது இந்த அங்கிகாரத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கிறது. ஒரு குறிப்பிட்ட சுயாதீன மதிப்பீட்டிற்குப் பிறகே இவ்விருது வழங்கப்பட்டது. இது குறிப்பிட்ட பரிவர்;த்தனைகள் ஏறபடுத்திய நேர்மறையான தாக்கத்தினையும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வணிகத்தை மேம்படுத்த மற்றும் TSCFP வெற்றிக்கு பங்களித்த விதம் போன்ற பல காரணங்களை கணக்கில் கொண்டே இந்த அங்கிகாரம் வழங்கப்படுகிறது.


TSCFP ஆனது சர்வதேச வர்த்தகத்துக்கு ஆதரவளித்திட வங்கிகளுக்கு உத்தரவாதங்கள் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கின்றது. இத்திட்டமானது யுனுடீயின் யுயுயு கடன் மதிப்பீட்டின் ஆதரவுடன் ஆசியாவில் 200க்கும் மேற்பட்ட பங்குதார வங்கிகளுடன் இணைந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான நிதி உதவியை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. 2009ஆம் ஆண்டு முதல் ADBயின் TFP மூலதன பொருட்கள் முதல் மருத்துவ பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் வரையிலான துறைகளில்; 12000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரித்துள்ளது.


நாடு முழுவதும் மிகப்பெரிய பௌதீக ரீதியான மற்றும் டிஜிட்டல் வங்கித் தடத்திiனை மக்கள் வங்கி பதித்துள்ளது. கொவிட் 19 நெருக்கடியினால் பல சவால்களை எதிர்கொண்டாலும் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை ஆதரிப்பதன் மூலம் இலங்கைக்கான வர்த்தக வழிகளை திறந்து வைத்ததிருந்தது.


பெருந்தொற்றின் உச்சகட்ட காலத்திலும் முக்கியமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்தமைக்காகவே இக்குறிப்பிடட விருது வழங்கப்பட்டது. இந்த அங்கிகாரத்தின் மூலம் வங்கியானது நாட்டுக்காக செய்யும் முக்கிய சேவைக்காக மீண்டும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வங்கி தமது வர்த்தக நிதி வசதிகளைப் பயன்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இடர் அச்சுறுத்தல் காரணமாக அவர்களுடன் வர்த்தகம் செய்ய தயங்கும் நிறுவனங்களுடன் வர்த்தகங்களைச் செய்வதை சாத்தியமாக்கியது.


2011ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தக நிதித்திட்டத்தில் இணைவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நிதி வசதிகளை வழங்குவதற்கான திறனை வங்கி மேம்படுத்தியது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அவற்றின் வங்கிகள் இலங்கை அல்லது பிராந்தியத்திற்கு அபாய வரம்புகளைக் கொண்டிருக்கலாம். அவை கடன் ரீதியான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தடுக்கலாம். இதன் விளைவாக எதிர்க்கட்சி வங்கியானது இலங்கையில் வாடிக்கையாளரால் திறக்கப்பட்ட கடன்பத்திரத்தை மற்றொரு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். மக்கள் வங்கி TFPயில் பங்கேற்பதால் ADBயின் உத்தரவாதத்தினை வங்கியினால் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யக்கூடிய வசதிகளைப் பெற்றுக் கொடுக்கின்றது.


ஆசிய அபிவிருத்தி வங்கியினால் பேணப்படும் உயர் தர நிர்ணயங்களின் காரணமாக வங்கியொன்றை மதிப்பீடு செய்து அதன் திட்டத்திற்கு ஏற்றுக் கொள்கின்றது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் ADB உத்தரவாதத்தினை மதிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற கடன் தரமிறக்கத்தின் போது TFP இலங்கைக்கு உதவியதுடன் வணிகத்தை தொடர்ந்தும் நடத்திட இடமளித்தது.


இந்த வெற்றி குறித்து மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 'இந்த வெற்றியானது இலாப நோக்கங்களைத் தாண்டிய, நாட்டுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற மக்கள் வங்கியின் உறுதியான அர்;ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். பெருந்தொற்று நிலவும் சூழ்நிலையிலும் அதைக் கட்டுப்படுத்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் எடுத்த முயற்சிகள் விரும்பிய முடிவுகளை கொண்டு வந்திருப்பதானது எமக்கு பெரும் மனநிறைவைத் தருகிறது.' எனத் தெரிவித்தார்.


வங்கியின் சமீபத்திய சாதனை குறித்து மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃ பொது முகாமையாளர் திரு. ரஞ்சித் கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தொற்றின் காரணமாக நாடு ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுத்திடும் போதிலும் எமது நிலையிலிருந்து வங்கி ஆற்ற வேண்டிய தேசிய பங்கினை நாம் நன்கறிவோம். அதனாலேயே நாம் முன்பு முகம் கொடுத்திராத சவால்களுக்கு மத்தியிலும் அனைத்து வங்கிச் சேவைகளையும் தடையின்றி வழங்கிட எமது முழுக்குழுவும் அயராது, இடைவிடாமல் உழைத்தது. உண்மையில் எமது குழுவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக இது அமைகின்றது.' எனத் தெரிவித்தார்.

மக்கள் வங்கி 14 மில்லியனுக்கும் அதிகமான நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தினைக் கொண்டுள்ளது. மேலும் 739 சேவை நிலையங்களைக் கொண்ட மிகப்பெரிய கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் வங்கியானது நாடு முழுவதும் அமைந்திருக்கும் 250க்கும் அதிகமான சுய வங்கிச்சேவை அலகுகளில் வருடத்தின் 365 நாட்களும், கிழமையின் 7 நாட்களும், நாள்தோறும் 24 மணி நேரமும் செய்யக்கூடிய மிகவும் இலகுவான வினைத்திறன் மிக்க வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கிறது. வங்கியானது டிஜிட்டல் வங்கி நன்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் நாட்டின் டிஜிட்டல் வங்கித் துறையில் சேவை வழங்குவதில் முன்னோடியாகவும் திகழ்கிறது.

 

 

 

Last modified on Thursday, 14 October 2021 12:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd