நவம்பர் மாதம் முதலாம் திகதி இன்று முதல் ஒரு சில Android தொலைபேசிகளில் WhatsApp செயற்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இவ்வாறு WhatsApp செயற்படாத தொலைபேசிகளிலுள்ள WhatsApp குறுந்தகவல்கள் மற்றும் தரவுகளை வேறொரு தொலைபேசிகளுக்கு Backed Up அல்லது Save செய்யாத பட்சத்தில், அந்த தகவல்கள் அழிவடைந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp செயலணியை தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய தொலைபேசிகளுக்கு, பாவனையாளர்களை மாறுமாறு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.Android 4.1 மற்றும் அதற்கு பின்னர் வெளியான தொலைபேசிகளுக்கு WhatsApp செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.WhatsApp புதிய IOS மற்றும் KaIOS ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.Android 4.0.4 மற்றும் அதற்கு முன்னரான தொலைபேசிகளின் நாளை முதல் செயற்படாது என நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனால் பாதிக்கப்படும் பயன்பாட்டாளர்கள், குறித்த தினத்திற்கு முன்னர் புதிய தொலைபேசிக்கு மாறுமாறும், பழைய தரவுகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
WhatsApp உங்களின் Android தொலைபேசியில் தொடர்ந்தும் செயற்படுமா என்பதை எவ்வாறு பரிசோதிப்பது?*தொலைபேசியில் Settings > About phone என்பதற்குள் பிரவேசிக்கவும்.அதில் Android 4.0.4 அல்லது அதற்கு குறைவான தரத்தை கொண்டது என்றால், அந்த தொலைபேசிகளில் WhatsApp நாளை முதல் செயற்படாது.
WhatsApp கலந்துரையாடல்களை backup எடுப்பது எவ்வாறு?WhatsApp செயலணிக்குள் பிரவேசிக்கவும்Settings > Chat > Chat backup > Back up from the WhatsApp settings.WhatsApp கலந்துரையாடலுக்குள் பிரவேசித்து, WhatsApp செயலணியின் வலது பக்க மேல் முனையிலுள்ள 3 புள்ளிகளை அழுத்தவும்.அதில் MORE என்பதை அழுத்தி, Chats Exportயை மீண்டும் அழுத்துவதன் ஊடாக கலந்துரையாடல்களை BackUp செய்துக்கொள்ள முடியும்.