முற்றிலும் போலியான மற்றும் அவதூறான அறிக்கையை வெளியிட்டு SLT வர்த்தக நாமத்துக்கு சீர் செய்ய முடியாத வகையில் இழப்பை ஏற்படுத்தியமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்காரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி நேற்றைய தினம் (01.11.2021) ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
2021 செப்டெம்பர் 3ஆம் திகதி தேசிய மருந்துப் பொருட்கள் மற்றும் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) தரவுகளை சேகரித்து வைக்கும் பணியை SLT மேற்கொண்டிருந்ததாக திரு.நானயக்கார அறிக்கை வெளியிட்டதுடன் SLT மற்றும் SLT இன் தவிசாளர் குறுகிய உள்நோக்கத்திற்காக NMRA இன் தரவுகளை வேண்டுமென்றே அழித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
சட்ட நடவடிக்கையின் கீழ் திரு.நானயக்காரவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிவித்தல்கள் நிறுவனத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அவதூறாகவும் வெளியிடப்பட்டதாக சட்ட ரீதியான பிரகடனத்தை வெளியிடுமாறு ளுடுவு நாடியுள்ளது.
குறித்த அறிக்கையை வெளியிட்டு நிறுவனத்தின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சட்டத்துக்கு புறம்பான வகையிலும் ளுடுவு இன் உரிமைகளுக்கு எதிராவும் திரு. நானயக்கார செயலாற்றியுள்ளதாக ளுடுவு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வறிக்கை உண்மைத்தன்மை பொது
மக்களின் நன்மை அல்லது வெகுமதி போன்றவற்றில் எவ்விதமான சட்டபூர்வமான அடிப்படையும்
கொண்டிருக்கவில்லை.
சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்னர் திரு. நானயக்காரவுக்கு அவரின் அறிக்கையை திருத்திக் கொள்ளுமாறும் டிஜிட்டல் கட்டமைப்புகளில் அவர் பதிவிட்டிருந்த தவறான பதிவுகளை நீக்கிக் கொள்ளுமாறும் கோரிய இரு ஆவணக்கடிதங்களை SLT அனுப்பியிருந்தது. இவற்றுக்கு திரு. நானயக்கார செவிசாய்க்கவில்லை. இந்த அறிக்கைகய திரு.நானயக்கார மேற்க்கொள்ளும் போது NMRA தரவுகள் குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது சம்பவத்தின் பின்னர் SLT இன் பொறுப்பில் காணப்படவில்லை என்பது பொதுவில் அறியப்பட்டிருந்ததுடன் அது பிரிதொரு
நிறுவனத்தின் வசம் காணப்பட்டது.
நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் திரு. நானயக்காரவிடமிருந்து அறிக்கை ஒன்றையும் பதிவு செய்துள்ளது.