web log free
April 24, 2024

சீனாவில் இருந்து தெறித்து ஓடும் YAHOO!

சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் சர்வதேச நிறுவனங்களை வரவேற்ற சீனா, தற்போது அதுபோன்ற பெரு நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

எந்தவொரு பெரு நிறுவனத்திற்கு எதிராகவும் சீனா நேரடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் கூட, அந்நாட்டு அரசின் தற்போதைய நடவடிக்கைகள் பெரு நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான யாகூ சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் சீனாவில் உள்ள பயனர்களுக்கு யாகூ தனது சேவையை நிறுத்திவிட்டது. Yahoo அல்லது AOL மெயிலுக்கு வரும் சீனா பயனாளர்கள் மற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக (redirect) உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.