04 ஜனவரி 2022 கொழும்பு: மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலயத்தில் புத்தாண்டைக் கொண்டாடும் விழா ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இதன் போது அரச சேவை உறுதி மொழியை எடுத்துக் கொண்டு வங்கி ஊழியர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்தனர்.
இந்நிகழ்வின் போது மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃ பொது முகாமையாளரான ரஞ்சித் கொடிதுவக்கு உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து செத் பிரித் ஓதப்பட்டதுடன் பல்மத அனுட்டானங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் போது மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உரை நிகழ்த்துகையில்,
“Vistas of Prosperity எனும் செழுமைக்கொள்கை கட்டமைப்பிற்கு இணங்க இப்புத்தாண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரித்திடும் வங்கியின் உறுதிப்பாட்டினை வங்கி மீண்டும் வலியுறுத்துகின்றது.' எனவும், மேலும் அவர் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கடந்த ஆண்டு வழங்கிய ஆதரவுக்காக நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளரான ரஞ்சித் கொடிதுவக்கு உரை நிகழ்த்துகையில்,
'இப்புதிய வருடத்தில் அனைத்து பணியாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் ஆதரவுடன் வலுவான நிதிச் செயற்பாடுகள், டிஜிட்டல் இயக்கம் மற்றும் சேவைத்தரம் போன்ற துறைகளில் வங்கி கவனம் செலுத்திடும்.' எனவும், மேலும் சவால்கள்மிக்கதோர் ஆண்டில் தம்மோடு பயணித்த அனைத்து ஊழியர்களினதும் பங்களிப்புக்கு தமது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருநிறுவன மற்றும் நிர்வாக முகாமைத்துவம், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், சமய நிறுவனங்களின் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிகள் மற்றும் அனைத்து குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் ஒரே நேரத்தில் இதே போன்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பொதுச் சேவை உறுதிமொழியை அனைத்து ஊழியர்களும் எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.