web log free
December 03, 2024

Vantage இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் பாராட்டப்பட்டுள்ளது

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் கடந்த 3 வருடங்களாக Ebony Holdings நிறுவனத்தின் Vantage ஒரு கூட்டாளராக எமது நாட்டில் உதைப்பந்தாட்டத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டே மொனார்க் இம்பீரியலில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இந்த பங்களிப்புகளை பாராட்டி Vantage இற்கு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடனான அதன் கூட்டாண்மை மூலம் விளையாட்டில் முதலீடு மற்றும் நவீன உதைப்பந்தாட்டத்தை வளர்ப்பதில் தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை Vantage சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.   

இவ்விருது குறித்து Ebony Holdings நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ரசீன் ரஹீம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு முதன்மையான ஆண்களுக்கான ஆடை உற்பத்தியாளர் என்ற வகையில், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடனான எமது கூட்டாண்மை மூலம் நாங்கள் தொடர்ந்து உதைப்பந்தாட்டத்தின் மீது முதலீடு செய்து வருகிறோம். உலகளவில் பெரும் எண்ணிக்கையான இரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கையில் நாம் இருப்பது ஒரு பெரும் பாக்கியம். உதைப்பந்தாட்டம் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பதால், அதை ஆதரிப்பது மிகவும் பெருமைக்குரியது. எங்களின் பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருதை எங்களுக்கு வழங்கியதற்காக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நன்றிகள். எதிர்காலத்திலும் எங்களது கூட்டாண்மையை தொடர்ந்து முன்னெடுக்க ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.  

இலங்கையின் ஆண்களுக்கான சிறந்த நவநாகரிக இலச்சினைகளில் ஒன்றாக இருப்பது, உதைப்பந்தாட்டத்தை ஆதரிப்பதில் Vantage இற்கு ஒரு இயல்பான படியாகும். இலங்கையில் இந்த விளையாட்டு இன்னும் வளர்ச்சியடைந்து வருவதை நிறுவனம் புரிந்து கொண்டு, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தின் மீது முதலீடு செய்து, குறிப்பாக நிதியுதவி அடிப்படையில் அதனை வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் போற்றுகிறது. இவ்வாறாக, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்ப்பதில் Vantage மிகவும் மகிழ்ச்சியடைகிறது.

நாடளாவிய விநியோக வலையமைப்பைக் கொண்ட இலங்கையின் முதன்மையான ஆடை வழங்குனர்களில் ஒன்றான Ebony Holdings இன் குடையின் கீழ் வரும் முதன்மையான இலச்சினைகளில் Vantage உம் ஒன்றாகும். அதன் ஆண்களுக்கான உயர்தர ஆடை இலச்சினைகளின் தயாரிப்பு வரிசையில் மிகவும் பிரபலமான Ebony மற்றும் Luxure இலச்சினைகளும் உள்ளன. இவை அனைத்தும் ஆண்களின் ஆடையணிகளில் சமீபத்திய நவநாகரிக போக்குகளை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளன. தரம் மற்றும் அதிசிறந்த சேவை மீது நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, எப்போதும் வளர்ந்து வரும், விசுவாசமான வாடிக்கையாளர் தளத்திடமிருந்து அதிக மரியாதையையும் நன்மதிப்பையும் சம்பாதித்துள்ளது. நிறுவனம் தொடர்ந்து தனது தயாரிப்பு வழங்கலை மேம்படுத்தவும், எதிலும் அதிசிறந்தவற்றை நாடும் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொடர்ந்து உழைத்து வருகிறது.

Last modified on Monday, 31 January 2022 07:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd