தற்போதைய கால கட்டத்தில் லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றின் பயன்பாடு மிக அதிகமாகவே உள்ளது. நாள்தோறும் செல்போன், லேப்டாப் போன்ற கதிர்வீச்சுகளைத் தரும் கருவிகளையே பயன்படுத்தி வருகிறோம்.
இவற்றினைப் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், பயன்படுத்துவதற்கென விதிமுறை உள்ளது. நம் உடல் என்ன ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும், நம் அன்றாட செயல்முறையின் காரணமாக, எதாவதொரு விளைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையிலேயே, லேப்டாப் பயன்படுத்துவதும் அமையும். மடியில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்துவதால், ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
விந்தணுக்களின் தரம் பாதிப்பு
லேப்டாப் பயன்படுத்துவதால், ஆண்களுக்கு ஸ்க்ரோடல் ஹைபர்தெர்மியா உருவாகிறது. அதிகமாக AC-ல் இருப்பவர்கள், மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
நாம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இதற்கான முக்கிய காரணம் என்னவென்று நமக்குத் தெரியாது. இதன் விளைவாக, கருவுறுதலில் பாதிப்பு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது? இதனை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.