web log free
April 25, 2024

முக்கிய பொறுப்பில் இருந்து விலக பொன்சேகா முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விசேட காரணமொன்றின் காரணமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இந்த வாரம் கூடிய நாடாளுமன்றக் குழுவில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குழுவிலிருந்து வெளியேறுவதால், அதற்காக நியமிக்கும் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கணிசமான அனுபவமுள்ள நிபுணரான பொன்சேகா இங்கு இருக்க வேண்டும் என அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இந்த பதவியை விட்டு விலக வேண்டாம் என கேட்டுக் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ரவூப் ஹக்கீம், இந்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எம்.பி என்பதால் பொன்சேகாவிற்கு அவர் தலைமையில் செயற்பட முடியாது என  தெரிவிக்கப்பட்டது.

எனவே தம்மை இப்பதவிக்கு நியமிக்குமாறு ரவூப் ஹக்கீம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அது குறித்து நாடாளுமன்றக் குழு இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு நாடாளுமன்றத்தில் செயல்படும் முக்கிய குழுக்களில் ஒன்றாகும்.