உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.
கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.


