web log free
April 02, 2025

மனைவிக்கு சின்ன உள்ளாடை அணிவித்தவர் கைது

மனைவியின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, அவரை அரைநிர்வாணமாக்கி, தன்னுடைய மூன்றே மூன்று வயதான மகளின் சின்ன உள்ளாடையை உடுத்திவிட்டு, வீதியோரத்தில் நிறுத்திய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வீதியோரத்தில் நின்று, கூவியழைத்து விபசாரத்தில் ஈடுபட்டு, மதுபானம் வாங்குவதற்கு பணம் வசூழித்து வருமாறே, அக்கணவன், தன்னுடைய மனைவியை பிரதான வீதியோரத்தில் நிறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது. 

பண்டாரகம, கொத்தலாவல பிரதேசத்தில், வீதியோரத்திலுள்ள வீட்டுக்கு அண்மையிலேயே இந்த அருவருக்கத்தக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கத்தியை கையில் வைத்திருந்த அந்த நபர், பெண்ணொருவரை அரை நிர்வாணப்படுத்தி, கடுமையாக ஏசியவாறு, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததை, அவ்வழியாக பயணித்த முச்சக்கர வண்டியில் பயணித்தோர் கண்டுகொண்டனர். 

அவர்கள், அந்த வீதியில் சற்றுதூரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி சோதனை சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம், மேற்படி சம்பவம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

அதனடிப்படையில், வீதிரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவரை கைதுசெய்துள்ளனர். 

அவர், ஒன்றல்ல இரண்டு திருமணங்களை முடித்தவர்.

 தவறுதலாக கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து, நிக்கவரெட்டியைச் சேர்ந்த பெண்ணொருவரை இரண்டாம் தரமாக அவர் திருமணம் முடித்துள்ளார். 

இன்றையக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், மேற்படி வீட்டுக்கு வந்த அந்த நபர், அங்கு குடும்பம் நடத்திவருகின்றார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஐந்து வருடங்களில், சந்தேகநருக்கு மூன்று வயதில் பெண், பிள்ளையொன்றும், ஒருவயதில் ஆண் பிள்ளையொன்றும் இருகின்றனர். 

அந்த நபர், மதுபோதைக்கு அடிமையானவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால், ஏற்பட்ட குடும்ப தகராறுகள் காரணமாக, பொலிஸ் நிலையத்துக்கு பல முறை வருகைதந்துள்ளனர். அவ்விருவரையும் சமாதானப்படுத்தி, அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த நபர், தன்னுடைய மனைவியின் உள்ளாடைகளை உடுத்திக்கொண்டும், பெண்களுக்குரிய ஏனைய ஆடைகளை அணிந்தவாறும், வீதியோரத்தில் பல தடவைகள் நின்றிருந்துள்ளார்.

அதனையே, அவர் பழக்கவழக்கமாகவும் கொண்டிருந்துள்ளார் என அறியமுடிகின்றது 

அவ்வாறு பழக்கப்பட்டுக் கொண்ட அந்த நபர், தன்னுடைய மனைவியையும் வீதியில் நிறுத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தி, பணம் திரட்டுவதற்கும். அவ்வாறு கிடைக்கும் பணத்தில் மதுபானம் அருந்திவந்துள்ளார் என அறியமுடிகின்றது.

 

38 வயதான அந்த நபர், ஒரு  எலக்ட்ரீஷியன் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 09 September 2019 17:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd