முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் மூத்த புதல்வரான, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவம் இன்று (12) நடைபெறுகிறது.
இன்றுக்காலை, கொழும்பு -02 கங்காராமை விஹாரையில் இடம்பெறும் விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெறும்.
அதன்பின்னர், எதிர்வரும் 16ஆம் திகதியன்று கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் விசேட விருந்துபசார வைபவம் இடம்பெறவுள்ளது.
நாமலும், அவருடைய காதலியான லிமினி வீரசிங்ஹவும் இன்று திருமண பந்தத்தில் இந்துள்ளனர்.
இருவரும் காதலித்துள்ளனர். அதன்பின்னர், இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொள்கின்றனர்.
தன்னுடைய காதல் கதையை கூறும் நாமல் ராஜபக்ஷ,
“லிமினிக்கும் எனக்கும் இடையிலான காதல், இன்றையக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலர்ந்தது. அதுவும் மரதன் ஓட்டப்போட்டியொன்றிலேயே மலர்ந்தது. அதனோடு ஆரம்பமான இந்தத் தொடர்பு, இருவீடாரின் அனுமதியுடன் திருமண பந்தத்துக்கு சென்றுள்ளது” என்றார்.
“காதலுக்கு இரண்டு வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே, நாங்கள் இருவரும் எங்களுடைய பெற்றோரின் கவனத்துக்கு காதலை கொண்டுச் சென்றோம்” என்றார்.
என்னுடைய பெற்றோரும், லிமினியின் பெற்றோரும் அதற்கு மனபூர்வமான சம்மதத்தை தெரிவித்தனர்.
அது எங்களுடைய காதலை மென்மேலும் பலப்படுத்தியது.
பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைத்தாலும் எங்களுடைய காதல் இரகசியம் காக்கப்பட்டது.
எங்களுடைய தொடர்பை யாரும் தெரிந்துகொள்ளாத வகையில், உலகத்துக்கோ இந்தக் காதலை மூடி மறைக்கும் வகையில் எங்கள் இருவருக்கு இடையிலான தொடர்பை நாங்கள், முன்னெடுத்தோம்.
எது எவ்வாறாக இருந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு வருகைதந்திருந்த போதே இது தொடர்பில், பலரின் கவனம் செலுத்தப்பட்டது.
அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, நகைச்சுவையாக சொல்லப்பட்ட விடயத்தை அடுத்தே, எங்களுடைய காதல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதன் பின்னரே, என்னுடைய காதலியாக பலரும் லிமினியை பார்த்தனர்.
என்னுடைய தம்பி யோசித்தவின் திருமண வைபவத்தின் போது, எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் லிமினி நெருங்கி பழகுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
அப்படிதான் எங்களுடைய காதல் கதை தொடர்ந்து திருமணத்துக்குச் சென்றுள்ளது.
என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.