8 வருஷமாக உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.. கல்யாணமும் செய்து கொண்டார்கள்..
மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீரென அவர் தன்னுடைய தங்கை என்று தெரிந்துவிட்டது.
அப்படியானால் கணவனின் நிலை என்னவாக இருக்கும்? இங்கிலாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
24 வயது இளைஞர் ஒருவர், தன், ஊர், பெயர் எதுவுமே சொல்லாமல், சோஷியல் மீடியாவில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் தந்தை ஒருவர்தான் என்பது தெரியவந்தது.
அதனால், இதை கன்பார்ம் செய்து கொள்ள இருவருமே தனித்தனியாக டிஎன்ஏ டெஸ்ட் செய்து கொண்டோம்.
அதில் என் மனைவி என்னுடைய சகோதரி என்று தெரியவந்தது. ஆனால், நாங்கள் 8 வருஷமாக காதலித்து வந்தோம். இந்த வருட ஆரம்பத்தில்தான் கல்யாணமும் செய்து கொண்டோம். வர்ற மார்ச் மாதம் எங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது.
இப்படி ஒரு விஷயத்தை என்னுடைய அப்பா, அம்மாவும், என் மனைவியின் அப்பா, அம்மாவும் எங்களிடம் சொல்லவே இல்லை. இந்த பிரச்சினையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா? உங்கள் அட்வைஸ் வேண்டும்.
ஆனால் ஒன்று, இந்த விஷயத்தை நாங்கள் தெரிந்துகொண்ட பிறகும் எங்களின் உணர்வில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. நான் அவளை பிரியமாட்டேன். அவளும் என்னை பிரிய மாட்டாள். எங்களை யாரும் பிரிக்கவும் விடமாட்டேன். ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
பேசாமல், இந்த விஷயத்தை அப்படியே புதைத்துவிடவா?" என்று பதிவிட்டிருந்தார். இளைஞரின் இந்த வினோத பிரச்சனைக்கு பலரும் பலவித அறிவுரைகள், அட்வைஸ்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் பெரும்பாலானோர், "நீங்கள் தெரிந்து இதை செய்யவில்லை. உங்கள் காதல் வலுவாக இருக்கிறது. இப்படியே இருவரும் இருங்கள். ஆனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று மட்டும் டாக்டரிடம் கேளுங்கள்" என்று சொல்லி உள்ளனர்.
மேலும் சிலர், "ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்துங்க.. முதல்ல இந்த விஷயத்தை உங்க ரெண்டு பேர் அம்மாங்க கிட்டயும் சொல்லாதீங்க.. இதை வேறு யார்கிட்டயும் சொல்லாதீங்க" என்று அட்வைஸ் தந்துள்ளார். இளைஞரின் இந்த விசித்திர பிரச்சனைதான் இப்போது வைரலாகி வருகிறது.